இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியா செல்டோஸ் 2026 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கான முன்பதிவுகள் டிசம்பர் 11 முதல் தொடங்குகின்றன.
இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியா செல்டோஸ் 2026 அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. டிசம்பர் 11 முதல் ரூ.25,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். ஆர்வமுள்ளவர்கள் கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவோ அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப்பில் நேரடியாகவோ முன்பதிவு செய்ய முடியும். புதிய செல்டோஸின் விலை ஜனவரி 2, 2026 அன்று அறிவிக்கப்படும் மற்றும் டெலிவரிகள் ஜனவரி மாத நடுப்பகுதி முதல் தொடங்கும். ஸ்போர்ட்டி எக்ஸ்-லைன் வரிசை 2026 இரண்டாம் பாதியில் அறிமுகமாகும்.
2026 செல்டோஸின் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள் முந்தைய தலைமுறையை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நீளம், அகலம், உயரம் ஆகியவை அதிகரிக்கப்பட்டதால் இப்போது டாடா சியாராவை விட நீளமான எஸ்யூவியாக உள்ளது. கியாவின் டெல்லுரைடு எஸ்யூவியில் இருந்து ஈர்க்கப்பட்ட புதிய டிசைனில், உயர்தர பிளாக்-குலோசி டைகர் நோஸ் கிரில், ஐஸ்-கியூப் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லெம்ப்கள், ஸ்டார்-மேப் டிஆர்எல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் அமைப்பு அளவுக்கதிக ஸ்டைலை கொடுக்கிறது.
பாதுகாப்பு அம்சங்களில் புதிய செல்டோஸ் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது. ஆறு ஏர்பேக்குகள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ISOFIX மவுண்டுகள், ரியர் வியூ கேமரா ஆகியவை ஸ்டாண்டர்ட்டாக வழங்கப்படும். மேலும் லெவல் 2 ADAS அமைப்பின் 21 தன்னாட்சி பாதுகாப்பு அம்சங்கள் இந்த பிரிவில் செல்டோஸை ஒரு வலுவான போட்டியாளராக மாற்றுகின்றன.
இன்ஜின் விருப்பங்களில் மாற்றம் செய்யவில்லை. புதிய செல்டோஸ் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று சக்திவாய்ந்த இன்ஜின்களுடன் வருகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக், CVT, 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆகியவை கிடைக்கும்.
பக்கவாட்டில் 18-இன்ச் கிறிஸ்டல்-கட் அலாய் வீல்கள், புதிய பிளாஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள் மற்றும் தடிமனான கில்லாடிங் சேர்க்கப்பட்டுள்ளன வெளிப்புற தோற்றம் மேலும் உறுதியானதாக மாறியுள்ளது. பின்புறத்தில் தலைகீழ் L-வடிவ LED டெயில் லேம்ப்கள் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் தரப்பட்டுள்ளன.
12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், 12.3-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர், 5-இன்ச் HVAC டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ஸ்கிரீன் அமைப்பு புதிய செல்டோஸின் ஹைலைட். பவர் டிரைவர் சீட், 64-கலர் ஆம்பியன்ட் லைட்டிங், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஓடிஏ அப்டேட்கள், கனெக்டட் டெக் ஆகியவை பிரீமியம் அனுபவத்தை வழங்குகின்றன.


