- Home
- Auto
- இந்த மாதம் கார் வாங்கினால் இவ்வளவு லாபமா.. ரூ.25,000 ரொக்க தள்ளுபடி + எக்சேஞ்ச் போனஸ் இருக்கு
இந்த மாதம் கார் வாங்கினால் இவ்வளவு லாபமா.. ரூ.25,000 ரொக்க தள்ளுபடி + எக்சேஞ்ச் போனஸ் இருக்கு
மாருதி செலிரியோ காருக்கு டிசம்பர் மாதத்தில் ரூ.52,500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் நேரடி விலைக்குறைப்பு, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் பிற பலன்கள் அடங்கும்.

டிசம்பர் கார் ஆஃபர்
டிசம்பர் மாதத்தில் குறைந்த விலை மற்றும் சிறந்த மைலேஜ் கொண்ட ஹேட்ச்பேக் கார் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. செலிரியோ மாடலில் இந்த மாதம் ரூ.52,500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே மலிவு விலையில் கிடைக்கும் செலிரியோ மேலும் பொருத்தமான தேர்வாக மாறியுள்ளது. அனைத்து வேரியன்ட்களுக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வழங்கப்படுவது வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய நன்மையாகும்.
செலிரியோ தள்ளுபடி
செலிரியோவின் தள்ளுபடி அமைப்பு மிகவும் தெளிவாக உள்ளது. ரூ.25,000 நேரடி விலைக்குறைப்பு வழங்கப்படுகிறது. பழைய காரை மாற்றி கொடுத்தால் ரூ.15,000 எக்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். ஆனால், பழைய காரை ஸ்கிராப் செய்ய முடிவு செய்தால், இந்த போனஸ் ரூ.25,000 ஆக உயர்கிறது. இதற்கு கூடுதலாக ரூ.2,500 வரை சிறிய சலுகைகள் மற்றும் டீலர்ஷிப் அளவிலான பலன்களும் சேரலாம். மொத்தம் கணக்கிட்டால், வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.52,500 வரை சேமிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஹேட்ச்பேக் சலுகை
மாருதி செலிரியோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.73 லட்சம் வரை தொடங்குகிறது. இந்த விலை வரம்பில், அதிக மைலேஜ் மற்றும் சிக்கனமான என்ஜின் செயல்திறன் காரணமாக செலிரியோ இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 1.0 லிட்டர் K-சீரிஸ் டூயல்ஜெட் இன்ஜின், AMT ஆப்ஷன் மற்றும் ஆறு ஏர்பேக் வசதி போன்ற அம்சங்கள், நகரப் பயணத்திற்கு இதை சிறந்த மாடலாக மாற்றுகின்றன.
செலிரியோ விலை குறைப்பு
குறிப்பாக, மேற்கூறிய தள்ளுபடிகள் அனைத்து நகரங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. மாநிலம், நகரம், டீலர்ஷிப் ஸ்டாக், வேரியன்ட், நிறம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம். எனவே, காரை வாங்கும் முன் உங்கள் அருகிலுள்ள டீலரை நேரடியாக தொடர்பு கொண்டு உண்மையான தள்ளுபடி விவரங்களை உறுதிப்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் இருக்கும்.

