மாருதி சுசுகி செப்டம்பர் 3, 2025 அன்று புதிய மிட்-சைஸ் SUV-ஐ அறிமுகப்படுத்துகிறது. கிராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட இந்த SUV, ஹைப்ரிட் என்ஜின், லெவல்-2 ADAS, மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ போன்ற அம்சங்களுடன் வரும்.

மாருதி சுசுகி, வரும் செப்டம்பர் 3, 2025 அன்று ஒரு புதிய மிட்-சைஸ் SUV-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது மாருதி எஸ்கியூடோ என அழைக்கப்படும் இந்த 5 சீட்டர் ஹைப்ரிட் SUV, அறிமுக நேரத்தில் புதிய பெயருடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கிராண்ட் விட்டாரா மாடலை அடிப்படையில் கொண்டதாக இருக்கும் மற்றும் மாருதியின் அரினா வரிசையில் முக்கிய மாடலாக இடம்பிடிக்கும்.

பவர்டிரெயின் விஷயத்தில், கிராண்ட் விட்டாராவில் உள்ளதைப் போலவே மூன்று விருப்பங்கள் கிடைக்கும். 103 bhp நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 116 bhp பெட்ரோல்-ஹைப்ரிட் மற்றும் 88 bhp CNG ஆகும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களும் வழங்கப்படும். முக்கியமாக, மாருதி எஸ்கியூடோவில் அண்டர்பாடி CNG டேங்க் இருக்கும். இதனால் பூட் ஸ்பேஸ் குறைவாக இருப்பது பற்றிய வாடிக்கையாளர் புகார்கள் குறையும்.

கிராண்ட் விட்டாராவிலிருந்து இதை வேறுபடுத்தும் அம்சம் ஃபோர்-வீல் டிரைவ் சிஸ்டம், இது உயர் வகைகளில் மட்டுமே வழங்கப்படும். மேலும், இந்த SUV மாருதியின் முதல் லெவல்-2 ADAS மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ வசதிகளுடன் வரும். இந்த அம்சங்கள் தற்போது ஹூண்டாய் கிரெட்டாவில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பில், புதிய SUV சுமார் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். கிராண்ட் விட்டாராவைவிட சற்று நீளமானது என்பதால் அதிக பூட் ஸ்பேஸை வழங்கும். வெளியேறிய படங்களில் சீல் செய்யப்பட்ட கிரில், ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களுடன் புதிதாக ஹெட்லெம்ப்கள், மேம்படுத்தப்பட்ட ஃபேக் லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன.

பக்கவாட்டில் சதுர வடிவ வீல் ஆர்ச்கள், ஸ்டைலிஷ் அலாய் வீல்கள், பாடி-கலர் ORVMகள், பாரம்பரிய டோர் ஹேண்டில்கள் மற்றும் சில்வர் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படும். பின்புறத்தில், லைட் பட்டையால் இணைக்கப்பட்ட LED டெயில்லெம்ப்கள் SUV-க்கு ஒரு நவீன தோற்றத்தை வழங்குகிறது.