- Home
- Business
- Own Car vs Rental: சொந்தமாக கார் தேவையா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம் ஈசியா! தெரிஞ்சு கிட்டா லட்சக்கணக்கில் மிச்சம்!
Own Car vs Rental: சொந்தமாக கார் தேவையா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம் ஈசியா! தெரிஞ்சு கிட்டா லட்சக்கணக்கில் மிச்சம்!
சொந்த கார் வாங்குவது இன்றைய சூழலில் அதிக செலவை ஏற்படுத்துகிறதா? டாக்ஸி சேவைகளின் வளர்ச்சியால் சொந்த காரின் தேவை குறைந்து வருகிறதா? உங்கள் பயணத் தேவை மற்றும் நிதிநிலைக்கு ஏற்ற சிறந்த தேர்வு எது?

சொந்த வீடு போல் நிம்மதி தரும் சொந்த கார்
ஒரு காலத்தில் சொந்தக் கார் வைத்திருப்பது பெருமையாகவும், தேவையாகவும் கருதப்பட்டது. ஆனால் இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில், எரிபொருள் விலை, வங்கிக் கடன் வட்டி, பராமரிப்பு செலவுகள் என நிதிசுமை அதிகரித்து வருகிறது. அதே சமயம், டாக்ஸி சேவைகள் வளர்ந்து, விரைவில் செல்லும் வசதியையும் வழங்குகின்றன. இந்நிலையில், ‘‘கார் வாங்கவேண்டுமா, வாடகைக்கு எடுக்கவேண்டுமா அல்லது டாக்ஸி சேவையை நம்பலாமா?’’ என்ற கேள்வி யாரையும் குழப்பாமல் இருக்காது.
கணக்கிட்டால் செலவு தெரியும்
5 ஆண்டுகளுக்கான பயணத் திட்டங்களை வைத்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் என்ன செலவு என கணக்கீட்டால் சில விஷயங்களை புரிந்துகொள்ள முடிகிறது.எடுத்துக்காட்டாக, நீங்கள் வருடத்திற்கு சுமார் 15,000 கிமீ பயணம் செய்கிறீர்கள் என்றால், சொந்தக் கார் வாங்குவது செலவில் நியாயமானதாக இருக்கும். காரணம், வங்கி கடன் வட்டி, இன்சூரன்ஸ், பராமரிப்பு போன்ற நிலையான செலவுகள், அதிக பயணத்தால் குறைந்த கிலோமீட்டருக்கு பகிரப்பட்டு, சராசரி செலவு குறையும். Maruti Suzuki Swift போன்ற காரை 5 ஆண்டுகளில் 75,000 கிமீ பயணம் செய்து பயன்படுத்தினால், ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹16 முதல் ₹17 வரை மட்டுமே செலவு ஏற்படும். இது பெரும்பாலான டாக்ஸி கட்டணங்களைவிட குறைவாகும்.
நீங்கள் வாடகை காரில் செல்லலாம்
நீங்கள் வருடத்திற்கு 9,000 கிமீ-க்கு குறைவாகப் பயணம் செய்கிறீர்கள் என்றால், Uber, Ola போன்ற ride-hailing சேவைகள், வசதியானதும் செலவில் சிக்கனமானதும் ஆகும். டாக்ஸி சேவையின் சராசரி செலவு கிலோமீட்டருக்கு ₹20 முதல் ₹22 வரை இருக்கும். குறைந்த பயணத் தேவையுள்ளவர்கள், வேலை காரணமாக இடம் மாறுபவர்கள், வீட்டில் அல்லது அலுவலகத்தில் காருக்கு நிறுத்துமிடம் இல்லாதவர்கள் இந்த விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
இப்படி செலவை குறைக்கலாம்
புது கார்களை வாங்கும் போது, GST மற்றும் cess சேர்த்து சுமார் 29% வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் பயன்படுத்திய கார்களை பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கினால், ஒரே 18% GST மட்டுமே செலவாகும். இதன் மூலம் புதிய காரை வாங்குவதற்கான முதலீட்டின் ஒரு பகுதியைத் தடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
நீங்கள் கார் வாங்கலாம்!
மொத்தத்தில், அதிக பயணத் தேவையுள்ளவர்கள் கார் வாங்குவது நியாயமான முடிவாக இருக்கும். குறைந்த பயணம் மற்றும் சீரான நகர்புற வசதிகள் கொண்டவர்களுக்கு டாக்ஸி சேவைவே சிறந்த தேர்வு. இறுதியில், உங்கள் பயண தேவைகள், வசதிகள் மற்றும் செலவுகளை நன்கு கணக்கிட்டு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் என்ன செலவாகிறது என்பதை தெரிந்து கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை முறை மற்றும் நிதிநிலைபோல், எது நீண்ட காலத்தில் சிறந்தது என்பதை துல்லியமாக தேர்வு செய்தால் தான், மன நிம்மதியுடனும் செலவில் சிக்கனமாகவும் வாழ முடியும்.