- Home
- Business
- Food Industry: ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3 லட்சம் வருமானம்! உணவுத்தொழிலில் கலக்கலாம் வாங்க!
Food Industry: ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3 லட்சம் வருமானம்! உணவுத்தொழிலில் கலக்கலாம் வாங்க!
குறைந்த முதலீட்டில் உணவுத்தொழில் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டலாம். 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, வருடத்திற்கு 3 லட்சம் வரை சம்பாதிக்கலாம். பால் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.

சுய தொழில் தொடங்கலாம் ஈசியா!
இன்றைய காலத்தில் எல்லோருக்கும் தொழில் ஆரம்பிக்க ஆசை உண்டு. ஆனால், பெரிய முதலீடு இல்லாமலும் நல்ல வருமானம் தரக்கூடிய வழிகள் இருக்கின்றன. உணவுத்தொழில் அப்படிப்பட்ட ஒரு துறைதான். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பயிற்சி நிகழ்ச்சியில் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது – 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், வருடம் 3 லட்சம் வருமானம் சம்பாதிக்க முடியும்! 30 ஆயிரம் ரூபாய் என்பது பெரிய விஷயம் இல்லை என்பதால் அதனுடன் சிறிது உழைப்பை சேர்த்து முதலீடு செய்தால் லட்சங்களில் லாபத்தை அள்ளிக்குவிக்கலாம்.
மதிப்பு கூட்டுதல் எனும் கலை!
உணவு, பால், பழம், காய்கறி போன்ற பொருட்களை மதிப்புக்கூட்டி (Value Addition) அதில் கொள்ளை லாபம் ஈட்டலாம் என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.பொதுவாக, பால் மட்டுமே விற்கும் போது லாபம் குறைவாக இருக்கும். ஆனால் அதிலிருந்து நெய், பன்னீர், ஐஸ்க்ரீம், ரோஸ்மில்க் போன்ற தயாரிப்புகள் செய்து விற்பனை செய்தால் வருமானம் பல மடங்கு உயரும்.
ஈசியா சம்பாதிக்கலாம்!
பாலை சூடுபடுத்தி, சிட்ரிக் அமிலம் சேர்த்து பன்னீர் தயாரிப்பது மிகவும் எளிதான விஷயமே. சிட்ரிக் அமிலம் என்றால் அது எங்கும் கிடைக்காத பொருள் அல்ல. எலுமிச்சை பழத்தின் சாற்றை ஊற்றிலானே போதும். அதேபோல் ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கான கலவைகள் செய்வது, ரோஸ்மில்க், பாதாம் பால் போன்ற சுவையான பானங்களை தயாரித்து சந்தைப்படுத்தினால் லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.
குறைந்த முதலீடு அதிக லாபம்!
இதற்கு பால் பிரிப்பான், ஐஸ்க்ரீம் மேக்கர் போன்ற சில இயந்திரங்கள் தேவைப்படும். ஆனால், ஆரம்ப கட்டத்தில் பெரிய இயந்திரங்கள் வாங்காமல் இன்குபேஷன் மையங்களில் (Food Incubation Centre) உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு வருடத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
ஆலோசனை, பயிற்சி கிடைக்கும்!
இன்குபேஷன் மையங்களில் இந்த கட்டணத்தில் ஆலோசனை, தொழில்நுட்ப உதவி, FSSAI சான்றிதழ் பெறும் வழிகாட்டுதல் போன்றவை கிடைக்கும். அதே நேரம், முயற்சி செய்பவருக்கு தன்னம்பிக்கை, திறமை மற்றும் சுயதொழில் அனுபவமும் கிடைக்கும். எளிய முறையில், வீட்டிலிருந்தே இந்த தயாரிப்புகளை செய்து, பாட்டிலிங் செய்து, பக்கத்து கடைகளில், மார்க்கெட்டில் விற்பனை செய்து வருமானம் பெற முடியும்.
மாதம் 30 ஆயிரம் கிடைக்கும்!
ஒரு மாதம் சுமார் 25–30 ஆயிரம் ரூபாய் வருமானம் எடுக்கலாம். பண்டிகை காலங்களில், திருமண சீசன்களில் தேவை அதிகரிக்கும் போது, லாபம் மேலும் அதிகமாகும். வருடம் முழுக்க திட்டமிட்டு உழைத்தால் 3 லட்சம் வரை வருமானம் எட்டுவது சாத்தியம்.
சிறிய பயிற்சி அதிக முயற்சி
தொடங்கும் முன் சிறிய பயிற்சி பெற்றாலே போதும். இன்றைய சூழலில், உணவுத்தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம். குறைந்த முதலீட்டுடன் நம் குடும்பத்துக்கு சுய வருமானம் ஏற்படுத்த இது ஒரு சிறந்த வழி. உழைத்தால் வளர்ச்சி நிச்சயம்!