Asianet News TamilAsianet News Tamil

லோன் எடுத்து கார் வாங்கப் போறீங்களா? என்னென்ன செலவு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு முடிவு பண்ணுங்க!

கடன் மீது வட்டி விகிதத்துடன் மாதாந்திரத் தவணைத் தொகை செலுத்த வேண்டும். பெரும்பாலும் கார் கடனுக்கான செலவு அசல் மற்றும் வட்டி மட்டுமே என்று நம்பப்படுகிறது. ஆனால் கடன் மீதான டவுன்பேமென்ட் தவிர வேறு செலவுகளும் இருக்கும்.

Buying a car? Know the true cost of car ownership sgb
Author
First Published Apr 4, 2024, 5:13 PM IST

கார் வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது கார் டீலர்ஷிப்கள் வழங்கும் நிதியுதவி வழங்குகின்றன. முழு விலையையும் முன்பணமாக செலுத்துவதற்குப் பதிலாக, கடன் தொகையை குறிப்பிட்ட காலத்தில் பல தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். பொதுவாக தவணைக்காலம் 1-7 ஆண்டுகள் இருக்கிறது.

இந்தக் கடன் மீது வட்டி விகிதத்துடன் மாதாந்திரத் தவணைத் தொகை செலுத்த வேண்டும். பெரும்பாலும் கார் கடனுக்கான செலவு அசல் மற்றும் வட்டி மட்டுமே என்று நம்பப்படுகிறது. ஆனால் கடன் மீதான டவுன்பேமென்ட் தவிர வேறு செலவுகளும் இருக்கும்.

வட்டி விகிதம் மற்றும் தவணைக் காலம்

வட்டி விகிதம் கார் கடனுக்கான செலவை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். வெவ்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களை ஒப்பிட்டு மிகவும் சாதகமான விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதங்கள் உள்ளவரிடம் கார் கடன் வாங்கலாம்.

கடன் செலுத்த தேர்வு செய்யும் தவணைக் காலம் மொத்த வட்டியைத் தீர்மானிக்கிறது. நீண்ட கடன் விதிமுறைகள் மாதாந்திர தவணையை குறைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அதிக வட்டி செலுத்துதலுக்கு வழிவகுக்கும். கணிசமான தொகையை முன்பணமாகச் செலுத்துவது கடன் தொகையைக் குறைக்கிறது. எனவே, கடன் சுமையைக் குறைக்க கணிசமான முன்பணத்தை சேமிப்பது நல்லது.

தமிழ்நாட்டில் டெஸ்லா தொழிற்சாலை... விரைவில் ஆய்வு செய்ய வருகிறது எலான் மஸ்க் குழு!

Buying a car? Know the true cost of car ownership sgb

கட்டணம் மற்றும் அபராதம்

கடன் அளிக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் சார்பில் செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படலாம். கடன் வாங்குபவர்கள் இந்தக் கட்டணங்களைப் பற்றி விசாரித்து மொத்த செலவில் அவற்றைக் கணக்கிட வேண்டும். சில கடன் வழங்கும் நிறுவனங்கள் தவணைக் காலம் முடிவதற்கு முன், கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தினாலும் அபராதம் விதிக்கின்றனர். இந்த அபராதங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

கார் கடன்களுக்கு விரிவான காப்பீட்டும் வாங்க வேண்டும். இது ஒட்டுமொத்த செலவை அதிகரிக்கும். மலிவான காப்பீட்டுத் திட்டத்தைக் கண்டறிய பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களை பரிசீலித்து முடிவு எடுப்பது அவசியம். கடன் ஒப்பந்தத்தில் உள்ள மறைக்கப்பட்ட கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். கடன் தொடர்பான ஆவணங்களை முழுமையாகப் படிப்பது இதுபோன் எதிர்பாராத செலவுகளைத் தவிர்க்க உதவும்.

உண்மையான செலவு:

இந்தியாவில் கார் வாங்குவதற்கான உண்மையான செலவைக் கணக்கிடும் போது, வாகனத்தின் விலையை மட்டுமின்றி, பல்வேறு தொடர்புடைய செலவுகளையும் கருத்தில் கொள்வது அவசியம்:

Buying a car? Know the true cost of car ownership sgb

காரின் விலை மற்றும் பதிவு:

எக்ஸ்-ஷோரூம் விலை, வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் சேர்ந்தது தான் காரின் உண்மையான விலை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் வாகனப் பதிவுக்கான பதிவுக் கட்டணத்தை விதிக்கிறது, இது காரின் விலை மற்றும் எஞ்சின் திறனைப் பொறுத்து மாறுபடும். சாலை வரி என்பது பதிவு செய்யும்போது ஒருமுறை செலுத்த வேண்டிய வரி. இதுவும் ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

கார் இன்சூரன்ஸ் ப்ரீமியம்:

இந்தியாவில் உள்ள அனைத்து கார்களுக்கும் விரிவான காப்பீடு கட்டாயம். பிரீமியம் தொகை காரின் தயாரிப்பு, மாடல் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகள்:

நீண்ட கால பயன்பாட்டிற்கு காருக்காக பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் செலவும் அத்தியாவசியம் ஆகும். எரிபொருள் விலைகள் மற்றும் காரின் மைலேஜ் ஆகியவையும் கார் வைத்திருப்பவர்கள் சமாளிக்க வேண்டிய முக்கிய செலவுகளாக இருக்கும்.

பிளிப்கார்ட், அமேசானில் அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! FSSAI அதிரடி உத்தரவு!

Follow Us:
Download App:
  • android
  • ios