Asianet News TamilAsianet News Tamil

பிளிப்கார்ட், அமேசானில் அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! FSSAI அதிரடி உத்தரவு!

பால், தானியங்கள் அல்லது மால்ட் அடிப்படையிலான பானங்களை "ஆரோக்கிய பானங்கள்" (Health Drinks) அல்லது "ஆற்றல் பானங்கள்" (Energy Drink) என்று குறிப்பிடக் கூடாது என FSSAI அறிவுறுத்துகிறது. 

Government tells Flipkart, Amazon and other ecommerce companies to stop using this term sgb
Author
First Published Apr 4, 2024, 12:04 AM IST

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் சில பான வகைகளுக்கு துல்லியமான லேபிளிங்கை வலியுறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

பால், தானியங்கள் அல்லது மால்ட் அடிப்படையிலான பானங்களை "ஆரோக்கிய பானங்கள்" (Health Drinks) அல்லது "ஆற்றல் பானங்கள்" (Energy Drink) என்று குறிப்பிடக் கூடாது என FSSAI அறிவுறுத்துகிறது. நாட்டின் உணவுச் சட்டங்களுக்குள் "சுகாதார பானம்" என்ற வார்த்தைக்கான தெளிவான வரையறை இல்லாததே இந்த உத்தரவுக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் கீழ் கார்பனேற்றப்பட்ட மற்றும் கார்பனேற்றப்படாத நீர் சார்ந்த சுவை கொண்ட பானங்களுக்கு "ஆற்றல் பானம்" என்ற பெயர் உள்ளது.

மோடியின் காமெடி டைம்... நிர்மலாவின் வாழைப்பழ காமெடி... : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு

Government tells Flipkart, Amazon and other ecommerce companies to stop using this term sgb

தவறான சொற்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் என்பதை உணர்ந்து, ஈ-காமர்ஸ் மற்றும் உணவு விநிநோயக நிறுவனங்கள் தவறான வகைப்படுத்தலை உடனடியாக சரிசெய்யுமாறு FSSAI கேட்டுக்கொண்டிருக்கிறது. "ஆரோக்கிய பானங்கள் / ஆற்றல் பானங்கள்" வகையிலிருந்து அத்தகைய பானங்களை அவர்கள் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.

2006 இன் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் மற்றும் உணவுத் தொழிலை நிர்வகிப்பு தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குள் "ஆரோக்கிய பானம்" என்ற சொல்லுக்கு இடமில்லை என்று ஆணையம் தெளிவுபடுத்துகிறது. மறுபுறம், "ஆற்றல் பானங்கள்" பயன்பாடு குறிப்பிட்ட அளவுகோல்களுக்குள் வரும் தயாரிப்புகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இது தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சி என்றும் கூறியுள்ளது. தவறான தகவல்களைத் தவிர்த்து, நுகர்வோர் சரியான தேர்வுகளை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே ஆணையத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் புல் மற்றும் மான்ஸ்டர் போன்ற உலகளாவிய நிறுவனங்களைப் போல பெப்சிகோ, கோகோ கோலா மற்றும் ஹெல் போன்ற நிறுவனங்களும் ஆற்றல் பானங்களை வழங்குகின்றன. அவை நாடு முழுவதும் பிரபலமடைந்து தற்போது மளிகைக் கடைகளில் பரவலாகக் கிடைக்கின்றன. இளைஞர்களிடையே, இந்த ஆற்றல் பானங்களின் நுகர்வு அதிகரித்து வருவதால், அவற்றால் உடல்நல பாதிப்புகள் உண்டாவது குறித்த கவலைகளையும் எழுப்புகிறது.

மருந்துப் பொருள்கள் விலையை உயர்த்தவில்லை; வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios