நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளதாக கனவு சாஸ்திரம் சொல்கிறது. இவற்றில் நம்மை பயப்பட வைப்பது போன்ற கனவுகளும் வரலாம். அப்படி ஒன்று தான் பாம்புகள் கனவில் வருவது. பாம்புகள் அடிக்கடி கனவில் வருவதை தாண்டி, பாம்பினை அடித்து கொல்லுவது போல் கனவு கண்டால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை : பாம்பு தொடர்பான விஷயங்கள் கனவில் வருவதற்கு பல காரணங்கள் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் பாம்பினை நாம் அடித்து கொல்வது போல் கனவு வந்தால் நல்லதா? கெட்டதா? அந்த மாதிரி கனவு வந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.
பாம்பு கனவில் வந்தால்...
பாம்பு கடிப்பது போல், பாம்பு துரத்துவது போல் பாம்பு சீறுவது போல், பாம்பு படம் எடுப்பதை, பாம்பு சட்டை உறிப்பதை போல் என பாம்பு தொடர்பாக பலவிதமான கனவுகள் நம்மில் பலருக்கும் வருவது உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்றாலும், பொதுவாக பாம்பு வந்தால் குலதெய்வத்தை நினைவுப்படுத்துவதாக அர்த்தம் என்பார்கள். அதாவது குலதெய்வம் தெய்வம் கோவிலுக்கு நீண்ட காலமாக போகாமல், குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை செய்யாமல், குலதெய்வத்தை மறந்து இருந்தால் அதை நினைவுபடுத்துவதற்காக பாம்பு கனவில் வரலாம் என கனவு சாஸ்திரம் சொல்கிறது.
அதே போல் ஏதாவது முக்கியமான பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் வைத்து விட்டு, வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் பாக்கி வைத்திருந்தால் அதை நினைவு படுத்துவதற்காகவும் பாம்புகள் கனவில் வரலாம் என சொல்லப்படுகிறது. இது தவிர பாம்புகள் துரத்துவது, கடிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் விரைவில் தீரப் போகிறது என்ற அர்த்தம். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் தீர போகிறது என்று அர்த்தம்.
பாம்பு துரத்துவதாக கனவு கண்டால்...

பாம்பு உங்களை துரத்துவது போல் கனவு கண்டால், உங்களை விடாமல் துரத்தி துன்புறுத்திக் கொண்டிருக்கும், நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வர போகிறது என்று அர்த்தம். பாம்பு கடிப்பதாகவோ, படம் எடுப்பதாகவோ கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த கனவு வரக் கூடாது :
அதே சமயம் பாம்பு உங்களின் காலை சுற்றிக் கொள்வது போல் கனவு காண்பது நல்லதல்ல. சனி பகவான் உங்களை பிடிக்க போகிறார். நீங்கள் பெரிய சிக்கல் ஒன்றில் சிக்கிக் கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தம். அது மட்டுல்ல கருநாகத்தை கனவில் காண்பதும் நல்லது கிடையாது. சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப தோஷம் மிக கடுமையாக இருந்தால் கருநாகம் கனவில் வரும். இதற்கு ஜோதிடரை அணுகி, உரிய சர்ப்ப சாந்தி பூஜைகள், தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
பாம்பை அடிப்பதாக கனவு கண்டால்...
சரி விஷயத்திற்கு வருவோம். பாம்பை நீங்கள் அடிப்பதாகவோ அல்லது அடித்து கொல்வதாகவோ கனவு கண்டால், பெரிய ஆபத்து ஒன்று உங்களை விட்டு நீங்கியதாக அர்த்தம். நெருங்கி வந்த பெரிய பிரச்சனை ஒன்று விலகி போய் விட்டது என்றும், உங்களை பயமுறுத்திய மிக முக்கியமான பிரச்சனை ஒன்றிற்கு அதிரடி தீர்வு கண்டு, அதில் மிகப் பெரிய வெற்றியும் பெற போகிறீர்கள். இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்பதை குறிப்பதாகும். கனவில் பாம்பை அடித்தாலும், கொன்றாலும் உங்களை சுற்றி உள்ள ஆபத்துக்கள், பிரச்சனைகள் விரைவில் நீங்கப் போகிறது என்று அர்த்தம். இந்த கனவுகள் அது காணும் நேரத்தை பொறுத்து உங்களுக்கு உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ பலனை தரலாம்
