மகனுக்கு சரியாக முடி வெட்டாத சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்... பின்னர் மகன் கொடுத்த டிவிஸ்ட்!!

Feb 20, 2023, 12:02 AM IST

திருநெல்வேலியில் தனது மகனுக்கு சரியாக முடித்திருத்த செய்யாத சலூன் கடைக்கு காவலர் பூட்டுப்போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த காவலர் நேவிஸ் பிரிட்டோ என்பவர் தனது மகனை அப்பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு முடி வெட்ட அனுப்பியுள்ளார். முடிவெட்டி விட்டு வீடு திரும்பிய மகனை பார்த்து ஆத்திரமடைந்த நேவிஸ் பிரிட்டோவின் மனைவி இதுக்குறித்து நேவிஸ் பிரிட்டோவிடம் தொலைப்பேசியில் கூறியுள்ளார். அதன்பேரில் வீட்டிக்கு வந்த நேவிஸ் பிரிட்டோ, மகனின் தலையை பார்த்து ஆத்திரம் அடைந்தார். ஸ்டைலாக வெட்டியிருந்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்.? ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட கோவை இளைஞர்..!

இதை அடுத்து தனது மகனை அழைத்துக் கொண்டு திசையன்விளை ராமகிருஷ்ணா பள்ளி எதிரே உள்ள சலூன் கடைக்கு சென்றுள்ளார். கடையின் உரிமையாளர் சிவராமன் உணவருந்த சென்றதை அடுத்து தொலைபேசியில் கடையின் உரிமையாளரை நேவிஸ் பிரிட்டோ தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கடையின் ஷட்டரை கீழே இழுத்து பூட்டு போட முயன்றுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனிடையே அங்கு வந்த கடையின் உரிமையாளர் சிறுவனுக்கு தான் முடி திருத்தம் செய்யவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நைட் கூட பேசுனேன்... இன்னைக்கு இப்படி ஆகிடுச்சு - மயில்சாமி மறைவால் எமோஷனல் ஆன நடிகர் செந்தில்

ஆனால் அதனை நேவிஸ் பிரிட்டோ ஏற்க மறுத்துள்ளார். விசாரணையில் சிறுவன் வேறு கடையில் தனது நண்பர்களுடன் வேறு ஒரு கடைக்கு சென்று ஸ்டைலாக வெட்டிக்கொண்டு பெற்றோர்கள் திட்டுவார்கள் என்பதால் மகன் கடையை மாற்றி சொன்னது தெரியவந்தது. இதை அடுத்து சலூன் கடைக்காரர் சிவராமன் காவலர் நேவிஸ் பிரிட்டோ மீது புகார் அளித்துள்ளார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் நேவி பிரிட்டோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.