Online Rummy : இன்னும் எத்தனை உயிர்.? ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட கோவை இளைஞர்..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First Published Feb 19, 2023, 6:04 PM IST | Last Updated Feb 19, 2023, 6:04 PM IST

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இதனால் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. எனவே தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில், கோவை வெள்ளலூர் கருப்பராயன் கோவில் விதியை சேர்ந்த மதன் குமார்  என்ற வாலிபர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 25 வயது ஆகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலிசார் நடத்திய விசாரணையில் மதன் குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்தாக கூறப்படுகிறது. வேலையில்லாத காரணத்தினாலும், கடன் பிரச்சனை அதிகமானதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..உச்சகட்ட கோபத்தில் சிறுபான்மையினர்.. ‘அங்க’ மட்டும் தயவு செஞ்சு போகாதீங்க! அண்ணாமலைக்கு தடை போட்ட அதிமுக

Video Top Stories