நைட் கூட பேசுனேன்... இன்னைக்கு இப்படி ஆகிடுச்சு - மயில்சாமி மறைவால் எமோஷனல் ஆன நடிகர் செந்தில்
நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நகைச்சுவை நடிகர் செந்தில், அவர் குறித்து பேசுகையில் கண்கலங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு பின் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் செந்திலும் இன்று வந்து அஞ்சலி செலுத்தினார்.
மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் செந்தில் பேசியதாவது : “மயில்சாமி எதார்த்தமாக நடிக்கக்கூடிய நல்ல நடிகர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். நேற்று இரவு கூட அவரிடம் பேசினேன். இன்னைக்கு இப்படி ஆகிடுச்சு” என பேசிக்கொண்டிருக்கும்போதே எமோஷனல் ஆகி கண்கலங்கினார் செந்தில்.