பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் தவெக கூட்டணி இல்லை ..! TVK நிர்மல் குமார் பேட்டி

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் தவெக கூட்டணி இல்லை ..! TVK நிர்மல் குமார் பேட்டி

Published : Nov 17, 2025, 08:00 PM IST

காங்கிரசுடன் விஜய் கூட்டணி பேசி வருவதாக வரும் தகவல்கள் வதந்தி. இதுகுறித்து முறைப்படியாக பொதுவெளியில் அறிவிக்கப்படும். இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. தலைவரின் ஒரே குறிக்கோள் மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. யாரெல்லாம் டிவி கே குறித்து பேசுகிறார்களோ அவர்களின் நோக்கத்தை மறந்து பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் திமுகவுடன் அங்கத்தில் இருக்கிறார்கள். திமுகவை பேசுவதை விடுத்து எங்களை பேசினால் , திமுகவிற்கு மறைமுகமாக வேலை செய்கிறார்கள். எங்களின் கொள்கை எதிரி யார் அரசியல் எதிரி யார் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டோம். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் கூப்பிடலாம் தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி. அவர்களைச் சொல்லி பேசி நாங்கள் மக்களை குழப்ப வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களுக்கு முக்கிய விரோதியாக இருக்கக்கூடிய திமுக தான் அரசியல் எதிரி, கொள்கை எதிரி பாஜக, இவர்கள் இருவர்கள் குறித்து தான் நாங்கள் பேச முடியும். எங்களின் கூட்டணி நிலையில் சென்ற மாதம் எப்படி இருந்தோமோ அப்படிதான் தற்போதும் இருக்கிறோம். பாஜக எங்களின் கொள்கை எதிரி , பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், எங்கள் கட்சியின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நடிகர் அஜித் குறித்து கேள்விக்கு, எங்கள் தளபதியின் நண்பர் நடிகர் அஜித், நிறைய ஊடகங்கள் ஆளுங்கட்சியைச் சார்ந்த ஊடகங்கள் இதை தவறாக பேசியிருக்கிறார்கள். அதற்கு சரியான விளக்கம் அஜித் கொடுத்துள்ளார் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தவெக மாநில இணை பொது செயலாளர் சிடி நிர்மல் குமார் மதுரையில் பேட்டி .

05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு