
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், '' மக்கள் ஆட்சியின் அடித்தளமே வாக்குரிமை தான். 18 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும். தகுதியுள்ள பெயர்கள் வாக்காளர் பட்டியலிருந்து விடுப்பட கூடாது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வேண்டும் என்பது அவசியம் தான், ஆனால் ஏன் இவ்வளவு அவசரமாக ''SIR'' கொண்டுவரப்படுகிறது? இந்த அவசரத்தினால் தான் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போனது. தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே SIR ஏன் கொண்டு வரப்படுகிறது?. வாக்காளர் பட்டியலை சரி செய்வதற்காக இவை நடக்கிறதா? அல்லது வேறு ஏதும் உள்ளதா? என சந்தேகம் எழும்புகிறது. தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவு குறைந்துவிட்டது. கர்நாடகா, மகராஷ்டிராவில் வாக்கு திருட்டு தொடர்பான நியாமான சந்தேகங்கள் தீர்க்கப்படவில்லை. வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடுவதில் என்ன தயக்கம்? அலுவலர்கள் செல்லும் போது வீட்டில் ஆட்கள் இல்லை என கூறியோ அல்லது அபத்தமான காரணங்கள் கூறி தகுதியான ஒருத்தரை கூட பட்டியலில் இருந்து நீக்கிவிடக் கூடாது. தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்க்கு ஆபத்தானது. நடுநிலையோடு செயல்படுகிறோம் என்பதை நிருபிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. நிதானமாக சட்டமன்ற தேர்தல் நிறைவுற்ற பிறகு இதனை செய்ய வேண்டும்.'' என்றார்.