vuukle one pixel image

234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம் - புஸ்ஸி ஆனந்த் தகவல்

Velmurugan s  | Published: Mar 7, 2024, 4:26 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய் ஊராட்சியில் வசிக்கும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த 7 பேருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவசமாக  வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. அதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். பின்னர்  எல்லாபுரம்  ஒன்றியம்  தமிழக வெற்றி கழகம் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். பின்னர் புதிதாக வீடுகள் கட்டித் தரப்பட்ட ஏழு குடும்பங்களுக்கு மின்விசிறி உள்ளிட்ட  வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், கட்சியினர்  நியாயமாக கட்சிப் பணியில் ஈடுபடுங்கள். எந்த பிரச்சினை வந்தாலும் தளபதி விஜய் பார்த்துக் கொள்வார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவரை முதல்வராக்கும் வகையில் சிறப்பாக அனைவரும்  செயல்பட வேண்டும். விரைவில் நடிகர் விஜய் தொகுதி வாரியாக பொதுமக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.