
புதுக்கோட்டை: தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என்றும் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 2 முறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்க வேண்டியது. ஒரு முறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனர். அது பேச்சுவார்த்தையில் நாங்களும் ஒப்புக்கொண்டோம். சரி. அதன்பிறகு எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தார்கள். இது எங்களின் முறை. எங்களுக்குத் தர வேண்டியது அவர்களின் கடமை." என்றார்