Dec 13, 2024, 4:38 PM IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் இதே நிலை தான் நீடிக்கிறது.