
திருச்சி விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்தற்போது சி.பி.எஸ்.சி கல்வி திட்டத்தில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி உள்ளார்கள். இது அந்த மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மிகப் பெரிய அழுத்தத்தை தருகிறார்கள் . சிறு வயதில் அந்த குழந்தைகள் அந்த அழுத்தத்தை எப்படி தாங்கிக் கொள்ளும்.கல்வி உரிமை சட்டத்தின் படி மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி கிடையாது என விதி உள்ள பொழுது இது போன்று மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனை தோல்வி அடைய செய்தால் அவர்கள் இந்த கல்வி திட்டத்திலிருந்தே வெளியேறி விடுவார்கள். இது பள்ளி இடைநிற்றலை தான் அதிகரிக்கும் என்றார்