கோவை.. பஸ்டாண்டில் செல் போன் திருடிய ஆசாமி.. 5 நிமிடத்தில் விரட்டி பிடித்த தலைமை காவலர் - குவியும் பாராட்டு!

கோவை.. பஸ்டாண்டில் செல் போன் திருடிய ஆசாமி.. 5 நிமிடத்தில் விரட்டி பிடித்த தலைமை காவலர் - குவியும் பாராட்டு!

Ansgar R |  
Published : Jun 07, 2024, 09:13 PM IST

Coimbatore : கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில், செல்போன் திருடனை விரட்டி பிடித்த தலைமைக் காவலர் கந்தசாமிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ், தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன் காணாமல் போயுள்ளது. சட்டென்று பதறிப் போனவர், தனது மொபைலை காணவில்லை என ராஜ் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் கந்தசாமியிடம் புகார் அளித்துள்ளார். 

உடனே அவர் முத்துகிருஷ்ணன் மற்றும் மதன் ஆகிய காவலர்களுடன் உடனே சோதனை மேற்கொள்ள சென்றார். அப்பொழுது மொபைல் போனை திருடியவன் தப்பி போடுவதை கண்ட காவல்துறையினர் ஓடிச்சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் இந்த துரித செயலை கண்டு பயணிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
10:57"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
08:28அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!
09:17Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
Read more