
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான ரவுடிகள் ராக்கெட் ராஜா, லெனின், நெடுங்குன்றம் சூர்யா ஆகியோர் சென்னைக்கு வரத் தடை விதித்து காவல் ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராவது, காவல் விசாரணை தவிர வேறு எந்தவொரு காரணங்களுக்கும் சென்னை வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏ பிளஸ் ரவுடிகள் சென்னையில் இருந்தாலும் சரி, பிற பகுதிகளில் இருந்தாலும் சரி நுண்ணறிவு பிரிவு போலீசார் தொடர்ச்சியாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். நுண்ணறிவு போலீசார் அளித்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.