vuukle one pixel image

பொது மேடையில் பெண்களின் இடுப்பை கிள்ளியது பாஜக ! விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய காயத்ரி ரகுராம் !

Velmurugan s  | Published: Mar 18, 2025, 2:00 PM IST

Vijay Annamalai controversy : பாஜகவும் - திமுக மறைமுக கூட்டணி என தவெக விமர்சித்திருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிருகரும், தவெக தலைவருமான விஜய்யை கடுமையாக வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். விஜய் ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செய்கிறார்.விஜய்யை போன்று நடிகையின் இடுப்பைக் கிள்ளி அரசியல் செய்கிறேனா, நாடகம் போடுவது விஜய். வொர்க் ப்ரம் ஹோம் (Work From Home ) பாலிடிக்ஸ் பன்னிகிட்டு, பேச கூடாது என அண்ணாமலை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார் .பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே அதிமுக மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.