தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய் பேசியதை வைத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
MK Stalin mocked Edappadi Palaniswami: தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய விஜய் திமுகவை கடுமையாக சாடினார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் நேரடி போட்டி என்றார். விஜய் பேசியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
எடப்பாடி பழனிசாமி பேச்சு
இதற்கு பதில் அளித்த அவர், ''தொண்டர்களை மகிழ்விப்பதற்கா விஜய் அப்படி பேசி இருக்கலாம். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். மக்கள் எங்களுக்கு தான் எதிர்க்கட்சி அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்'' என்று தெரிவித்தார். இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விஜய் பேசியதை வைத்து எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்த ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற ரமலான் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''தமிழ்நாட்டில் திமுக தான் எப்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும். இதை நான் மமதையில் கூறுவதாக நினைக்க வேண்டாம். மக்கள் மத்தியில் எங்களுக்கு இருக்கும் ஆதரவை வைத்து கூறுகிறேன். இப்போது 2வது இடத்தை பிடிப்பதற்கு தான் போட்டி நிலவுகிறது. 2026ல் நாங்கள் தான் ஆளுங்கட்சி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆனால் இப்போது நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று கூறுகிறார். எதிர்க்கட்சியாக யார் வர வேண்டும் என்பதில் தான் போட்டி நிலவுகிறது'' என்றார். விஜய் சொன்னது குறித்து பேசிய ஸ்டாலின் விஜய்யின் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து போட்டி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
முதலில் குரல் கொடுப்பது திமுக தான்
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின்,''ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு திமுக எப்போதும் பாடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு எதிராக எது நடந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான். சட்டப்பேரவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தனித்தீர்மானம் கொண்டு வந்தோம்'' என்றார்.
உட்கட்சி விருப்பம்
மேலும் பேசிய ஸ்டாலின், ''வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தபோது அதற்கு ஆதரவு கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விட்டார். அவர் கார் மாறி மாறி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அவர் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசியது எங்களுக்கு தேவையில்லை. அது அவர்களின் உட்கட்சி விருப்பம்.
அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சி
ஆனால் டெல்லியில் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அவருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி. எடப்பாடி பழனிசாமி கார் மாறி மாறி போனதை நான் சட்டப்பேரவையில் பேசியபோது அவைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று அதிமுகவினர் தெரிவித்தனர். அந்த அளவிற்கு அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது'' என்று தெரிவித்தார்.
அதிமுகவை கைப்பற்றும் செங்கோட்டையன்? அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு! 'மெகா' கூட்டணிக்கு பிளான்!