Velmurugan s | Published: Mar 20, 2025, 4:00 PM IST
Tamilnadu law and order : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் படப்பை சுரேஷ் உள்ளிட்ட இருவர் கொலை, நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை, திருப்பூரில் கொலை என அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. எனவே குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.