IPL 2025 KKR vs RCB Toss Report in Tamil : ஐபிஎல் 2025 தொடரில் 18ஆவது சீசனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2025 தொடர் பிரமாண்டமாக தொடங்கியது. பிரமாண்ட தொடக்க விழாவுக்குப் பிறகு, இப்போது ஐபிஎல் 2025 லீக் போட்டி தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஒரு கேப்டனாக தனது அறிமுக போட்டியிலேயே டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கேகேஆர் முதலில் பேட்டிங் செய்கிறது.
ஒரு டிக்கெட் ரூ.20 ஆயிரமா? ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற கும்பல் கைது!
இரு அணிகளும் இதற்கு முன்னதாக 34 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 20 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அதிகபட்சமாக 221 ரன்கள் எடுத்த நிலையில் குறைந்தபட்சமாக 49 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று கேகேஆர் அணியானது அதிகபட்சமாக 222 ரன்களும் குறைந்தபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளது.
ஷாருக்கான் முதல் ஷ்ரேயா கோஷல், திஷா பதானி வரை – பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2025 தொடக்க விழா!
கேகேஆர் வீரர்கள்:
குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
ஆர்சிபி வீரர்கள்:
விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், குர்ணல் பாண்டியா, ரஷிக் தர் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹசில்வுட், யாஷ் தயாள்.
டுவின்ஸ் மாதிரியே இருக்கும் ரவிச்சின் ரவீந்திரா – ஆண்ட்ரே சித்தார்த்; மாற்று தாயின் சகோதரர்கள்!
ஐபிஎல் 2025 தொடர் தொடங்கியது - KKR vs RCB முதல் போட்டியில் ரஜத் படிதார் டாஸ் வென்று பவுலிங்! pic.twitter.com/4Lj8kd2Z6p
— Asianetnews Tamil (@AsianetNewsTM)