IPL 2025 Opening Ceremony : ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் ஷ்ரேயா கோஷல், திஷா பதானி, கரண் அவுஜ்லா ஆகியோ இசை நிகழ்ச்சியை ஐபிஎல் 2025 மேடையில் அரங்கேற்றினர்.
IPL 2025 Opening Ceremony : ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் தற்போது தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் இன்று மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்றைய நிலவரப்படி வானம் தெளிவாக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வரையில் மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி ஐபிஎல் 2025 தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதன் முதல் நிகழ்ச்சியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மைதானத்திற்குள் எண்ட்ரி கொடுத்து 2 நிமிடம் சிறப்புரையாற்றினார்.
ஒரு டிக்கெட் ரூ.20 ஆயிரமா? ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற கும்பல் கைது!
இதையடுத்து பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் தனது இசை நிகழ்ச்சியை ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் அரங்கேற்றம் செய்தார். இதில், ஷ்ரேயா கோஷல் Mere Dholna, Saami Saami, Ghoomar, Kar Har Maidaan Fateh, Saami Saami, Vande Mataram Song என்று பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் வரையில் ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அவரைத் தொடர்ந்து கங்குவா பட நடிகை திஷா பதானி தனது டான்ஸ் நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.
டுவின்ஸ் மாதிரியே இருக்கும் ரவிச்சின் ரவீந்திரா – ஆண்ட்ரே சித்தார்த்; மாற்று தாயின் சகோதரர்கள்!
கடைசியாக பின்னணி பாடகர் கரண் அவுஜ்லா பாடல்கள் பாடி அசத்தினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 தொடரை ஷாருக்கான் தொடங்கி வைத்தார். ஐபிஎல் 2025 மேடைக்கு வந்த ஷாருக் கான், விராட் கோலியை அழைத்து அவரிடம் உரையாடினார். பின்னர் ரிங்கு சிங்குவை அழைத்து அவரிடம் பேசினார். தொடர்ந்து இருவருடனும் இணைந்து டான்ஸ் ஆடினார். இதையடுத்து பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் ஐபிஎல் சேர்மனை மேடைக்கு அழைத்து அவர்களுடன் பேசிய ஷாருக்கான் ஐபிஎல் தொடரின் 18ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் மிகப்பெரிய அளவிலான கேக் வெட்டி அதிகாரிகள் கொண்டாடினர்.
IPL : KKR vs RCB ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
மேலும், ஐபிஎல் 2025 டிராபி உடன் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளின் கேப்டன்கள் மைதானத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் டிராபியுடன் போட்டோஷோ நடத்தப்பட்டது. 18ஆவது ஐபிஎல் தொடரில் விளையாடும் விராட் கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக நேஷனல் ஆந்தம் பாடல் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
