Auto
டாடா மோட்டார்ஸின் அனைத்து பயணிகள் மற்றும் வணிக வாகனங்கள் 2% வரை விலை உயரும். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை ஈடுசெய்ய இந்த உயர்வு. ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப விலைகள் மாறுபடும்.
மாருதி சுசுகி கார்களின் விலையும் ஏப்ரல் 1, 2025 முதல் 4% வரை உயரும். மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் இயக்கச் செலவுகள் காரணமாக நிறுவனம் கார் விலையை உயர்த்தியுள்ளது.
முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா ஏப்ரல் 1 முதல் தனது எஸ்யூவி மற்றும் சிவி ரகங்களின் விலையை உயர்த்துகிறது. மார்ச் 21 அன்று நிறுவனம் 3% வரை விலை உயர்வை அறிவித்தது.
ஹூண்டாய் கார்களின் விலையும் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
ஹோண்டாவும் ஏப்ரல் 1 முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளது. இருப்பினும், நிறுவனம் விலையில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கவில்லை.
கியா கார்களின் விலையும் ஏப்ரல் 1 முதல் 30% வரை உயரும். பொருட்களின் விலை உயர்வு மற்றும் சப்ளை செயின் தொடர்பான செலவுகள் அதிகரித்ததால் அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெனால்ட் இந்தியா ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவீதம் வரை உயரும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இது மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப மாறுபடும்.