
ஐபிஎல் 2025 தொடர் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. ஐபிஎல் 2025 தொடக்க விழா நிகழ்ச்சியில் ஷ்ரேயா கோஷல், திஷா பதானி, கரண் அவுஜ்லா ஆகியோர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் தனது இசை நிகழ்ச்சியை ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் அரங்கேற்றம் செய்தார். இதில், ஷ்ரேயா கோஷல் Mere Dholna, Saami Saami, Ghoomar, Kar Har Maidaan Fateh, Saami Saami, Vande Mataram Song என்று பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் வரையில் ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அவரைத் தொடர்ந்து கங்குவா பட நடிகை திஷா பதானி தனது டான்ஸ் நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.
ஐபிஎல் 2025: அறிமுக போட்டியிலேயே டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார்!
கடைசியாக பின்னணி பாடகர் கரண் அவுஜ்லா பாடல்கள் பாடி அசத்தினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 தொடரை ஷாருக்கான் தொடங்கி வைத்தார். ஐபிஎல் 2025 மேடைக்கு வந்த ஷாருக் கான், விராட் கோலியை அழைத்து அவரிடம் உரையாடினார். பின்னர் ரிங்கு சிங்குவை அழைத்து அவரிடம் பேசினார். தொடர்ந்து இருவருடனும் இணைந்து டான்ஸ் ஆடினார். தான் நடித்த பதான் படத்தில் இடம் பெற்றுள்ள ஜூமே ஜோ பாடலுக்கு விராட் கோலியுடன் இணைந்து ஷாருக்கான் டான்ஸ் ஆடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு டிக்கெட் ரூ.20 ஆயிரமா? ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற கும்பல் கைது!
ஷாருக் கானிடம் நடனமாடக் கேட்ட கோலி: ஐபிஎல் தொடக்க விழாவின் போது ஷாருக் கான் விராட் கோலியிடம், இந்திய அணி ஐபிஎல் போட்டியில் சிக்ஸர் அடித்தாலோ, மேட்ச் ஜெயிச்சாலோ எப்படி கொண்டாடுவாங்கன்னு கேட்டார். என்னுடைய 'பதான்' பாடலுக்கு ஒரு ஸ்டெப் போட்டு காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். 'கிங் கான்' வேண்டுகோளை விராட் எப்படி மறுக்க முடியும்? விராட் எஸ்.ஆர்.கே.வுடன் இணைந்து பதான் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டு சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் முதல் ஷ்ரேயா கோஷல், திஷா பதானி வரை – பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2025 தொடக்க விழா!
இதையடுத்து பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் ஐபிஎல் சேர்மனை மேடைக்கு அழைத்து அவர்களுடன் பேசிய ஷாருக்கான் ஐபிஎல் தொடரின் 18ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் மிகப்பெரிய அளவிலான கேக் வெட்டி அதிகாரிகள் கொண்டாடினர். மேலும், ஐபிஎல் 2025 டிராபி உடன் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளின் கேப்டன்கள் மைதானத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் டிராபியுடன் போட்டோஷோ நடத்தப்பட்டது. 18ஆவது ஐபிஎல் தொடரில் விளையாடும் விராட் கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக நேஷனல் ஆந்தம் பாடல் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.