சாப்பாத்தி மீந்து விட்டு இனி தூக்கி எறிய வேண்டாம். இதை வைத்து அட்டகாசமாக ஒன்றல்ல ஏராளமான, சுவையான உணவு வகைகள் சமைத்து விடலாம். மீந்து போன சப்பாத்தியில் செய்த டிஷ்கள் என சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள்.
சப்பாத்தி சீந்து விட்டாலோ அல்லது பசிக்கும்போது உடனடி உணவு தேவைப்பட்டாலோ, எளிதாக செய்யக்கூடிய, சுவைமிக்க உணவுகளின் பட்டியல் இங்கே உள்ளது. மீதமுள்ள சப்பாத்தியை வீணாக தூக்கி எறிந்து விடாமல், இனி இந்த 6 அற்புதமான உணவுகளை வீட்டிலேயே செய்து பாருங்கள்.
மீதமான சப்பாத்தியில் செய்யக் கூடிய உணவுகள் :
1. சப்பாத்தி ரோல் :
மீதமுள்ள சப்பாத்தியை, காரமான மற்றும் காய்கறி கலந்த சூடான மசாலா அல்லது சிக்கன் கிரேவியுடன் உருட்டி பரிமாறலாம். இதில் மயோனிஸ், சாஸ், சீஸ் போன்றவற்றை சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்நாக்.
செய்முறை:
வெங்காயம், குடைமிளகாய், உருளைக்கிழங்கு, முட்டை அல்லது சிக்கன் கலந்த சத்தான கலவை தயாரிக்கவும். சப்பாத்தியை சிறிது வெந்நீரில் மென்மையாக்கி, கலவையை வைத்து உருட்டி, சூடாக பரிமாறவும்.
2. சப்பாத்தி உப்புமா :
சப்பாத்தியை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம், காரம், மிளகாய், கடுகு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி செய்யலாம். சிறிது பச்சை கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறினால் இனிப்பு மற்றும் காரசாரமான சுவை கிடைக்கும்.
செய்முறை:
கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, நறுக்கிய சப்பாத்தியை சேர்க்கவும். சிறிது நீர் தெளித்து நன்கு கலக்கி மூடி வைக்கவும். முடிவில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
3. சப்பாத்தி லட்டு :
சப்பாத்தியை பொடித்து, அதனுடன் வெல்லம், தேங்காய், நெய் சேர்த்து பந்தாக சுழற்றலாம். இது ஒரு உடல் ஊட்டச்சத்து நிறைந்த இனிப்பு. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சத்தான சுவையான டெசெர்ட்.
செய்முறை:
சப்பாத்தியை மிக்ஸியில் பொடிக்கவும். வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டவும். நெய் சூடாக்கி, பொடித்த சப்பாத்தி, தேங்காய், எள் சேர்த்து வதக்கவும். வெல்லம் சேர்த்து நன்கு கலக்கி, சிறிய உருண்டைகளாக செய்யவும்.
மேலும் படிக்க:சர்க்கரைவள்ளி கிழங்கு பரோட்டா...ஈஸியா செய்யலாம்
4. சப்பாத்தி சிப்ஸ் :
சப்பாத்தியை முக்கோணமாக வெட்டி, எண்ணெயில் பாதி வறுத்து, மேலே மசாலா தூள் தூவி பறிமாறலாம். இது அருமையான ஸ்நாக் ஆக இருக்கும்.
செய்முறை:
சப்பாத்தியை முக்கோணமாக வெட்டி, சிறிது எண்ணெய் தடவி கிரில் செய்யவும் அல்லது பொரிக்கவும். மேலே மிளகாய்தூள், ஓரிகானோ, அல்லது சம்பார் தூள் தூவலாம். தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் சிறப்பாக இருக்கும்.
5. சப்பாத்தி நூடுல்ஸ் :
சப்பாத்தியை நூடுல்ஸ் போல நீளமாக வெட்டி, காய்கறி மற்றும் சாஸ் சேர்த்து வதக்கி, சுவையான பாஸ்தா போல தயார் செய்யலாம். இது பச்சை மிளகாய், தக்காளி சாஸ், மற்றும் மசாலாக்களுடன் செமையாக இருக்கும்.
செய்முறை:
சப்பாத்தியை நூடுல்ஸ் போல வெட்டி வைக்கவும். எண்ணெயில் வெங்காயம், குடைமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். சோயா சாஸ், மிளகாய்த்தூள், மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். சப்பாத்தி நூடுல்ஸை சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.
6. சப்பாத்தி கொத்து பரோட்டா :
சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டி, முட்டை, சிக்கன் கிரேவி, அல்லது வெஜிடபிள் மசாலாவுடன் கெட்டியாக வதக்கி, கொத்து பரோட்டா போல் செய்யலாம். இது ரோட்டுக்கடை சுவையில் இருக்கும்.
மேலும் படிக்க:ஈஸியான மசாலா சாதம் வேற லெவல் ருசியில்
செய்முறை:
சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். எண்ணெயில் வெங்காயம், தக்காளி, மற்றும் மசாலா சேர்த்து வதக்கவும். முட்டை அல்லது சிக்கன் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, நன்றாக கலந்து பரிமாறவும். இந்தச் சமையல் யுக்திகளைப் பயன்படுத்தி, மீதமுள்ள சப்பாத்தியை சுவைமிக்க மற்றும் புதிய உணவாக மாற்றலாம்!