
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர்.