மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்

மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்

Published : Jan 03, 2024, 11:18 AM IST

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரே உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆட்சியர் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 116 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனிடையே கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரவீன்,  சாவித்திரி தம்பதியரின் மகனான அஸ்வந்த் என்பவருக்கு முதல் பிறந்தநாள் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதனை  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிமாறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவு சாப்பிட்டார். முன்னதாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு, பேனா, பென்சில், மற்றும் நோட்டு, புத்தகம் மற்றும் மாணவர்களுக்கு உணவு வழங்கினர். தங்களுடன் சேர்ந்து ஆட்சியரும் உணவு சாப்பிட்ட நிகழ்வை மாற்றுத் திறனாளிகள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்