Asianet News TamilAsianet News Tamil

ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!

பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்தியா கூட்டணி மோடியை கண்டு பயப்படுகிறது ராகுல் காந்தி வந்தால் நாடு சோமாலியா போல் ஆகிவிடும் என்று கூறியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வேலூர் வருகை தந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கடந்த முறை தேர்தல் முடிந்த பிறகு கேதர்நாத் சென்றார். பிரதமர் இந்தமுறை தமிழகம் வருவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது இல்லை. விவேகானந்தர் இல்லத்தில் பிரதமர் தவம் இருப்பதால் வாக்காளர்களை எந்த விதத்தில் பாதிக்கும் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணியினர் மோடியைக் கண்டு பயப்படுகிறார்கள். மோடியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் எதிராக பேசுவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். மதவெறி பிடித்த யானையை விட கொடூரமானது பாஜக என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே என கேட்டதுக்கு, பாஜக கூட்டணியில் இருந்த போது அவருக்கு தெரியவில்லையா. இவர்கள் வெளியே வந்ததும் அவர்களுக்கு மதம் பிடித்து விட்டது.

அரசியலுக்காக திமுக சிறுபான்மையினரின் காவலர்கள் என காட்டிக் கொள்கிறார்கள் ஆனால் அவர்களுடைய வீட்டில் கோவிலுக்கு சென்று பூஜை செய்கிறார்கள். இதுபோன்ற  மலிவான அரசியலை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் தியானம் செய்வதினால் என்ன பாதிப்பு ஏற்பட போகிறது. அது நல்ல விஷயம் தானே? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்னதில் தவறில்லை இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. எல்லா மதங்களையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா. அதேபோல் 1984 ஆம் ஆண்டு ஜெயலலிதா எம்பியாக இருந்தபோது காஷ்மீருக்கு 370 வது பிரிவு வேண்டாம் என்று தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவதற்கு பாக்கிஸ்தானிலா கட்ட முடியும். இங்குதான் கட்டமுடியும் என பேசி ஆதரவாக இருந்தார்.

அம்மா தெய்வ பக்தி மிக்கவர். பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மற்ற மதத்தையும் மதிப்பார்கள். அம்மா இந்து என்பதை அவரே சொல்லியுள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அரசியலுக்காக ஏதாவது சொல்லி வருகிறார்கள. தமிழகத்தில் பாஜகவை வளர்பதே திமுக தான். தமிழகத்தின் போதைப்பொருள் அதிக அளவில் பரவி வருவதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை பொருட்களை பயன்படுத்துவதினால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழகத்தின் போதைப்பொருள் கலாச்சாரத்தை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இளைஞர்களையும் மாணவர்களின் குறி வைத்து இந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை எல்லாம் தடுத்து வருகின்ற சமுதாயத்தை பாதுகாக்கின்ற முயற்சியில் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் இதனை செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு குஜராத்தில் இருந்து வருது அதனால் இங்க தடுக்க மாட்டோம் என சொல்வது நியாம் இல்லை. அங்க வந்தா என்ன இங்க தடுக்க வேண்டியது தான். தமிழகம் இன்றைக்கு போதை பொருள் ஹப்பாக மாறி வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமலும் மற்றும் அணைகளையும் கட்டி வருகின்றனர்.இதனை இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வப்பெருந்தைக சொல்கிறார் ராணுவத்தை கொண்டுவர வேண்டும் என அதெயெல்லாம் எதற்க்கு உங்க கட்சிதான் அங்க ஆட்சியில் இருக்கு நீங்க பேசி தீர்வு காணலாமே என கூறினார்.

சோனியா காந்தியிடம் சொல்லி கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் பேசி பேய் ஆட்டம் ஆடாமல் தமிழகத்தின் உரிமையை வாங்கலாமே. தமிழகம் என்ன பிச்சையா கேட்கிறது? தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வந்தால் தான் தீர்க்க முடியும். ராகுல் காந்தி வந்தால் நாடு சோமாலியாவாக மாறிவிடும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் ஆனால் பழனிச்சாமி போன்றவர்கள் பதவி சுயநலம் வெறி பணத்திமிர் அதிகார திமிரில் ஆட்டம் போடுகிறார். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அம்மாவின் தொண்டர்கள் விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து வருவார்கள். என என்னுடைய நம்பிக்கை. மேலும் ஜீன் 4 க்குக்கு பிறகு அதிமுகவில் யாருக்கு  அதிரடி மாற்றம் நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

Video Top Stories