Watch : மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை வானிலை! வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

Apr 24, 2023, 11:13 AM IST

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வெப்பம் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே காற்றுடன் கூடிய லேசான மழை பெய்தது. நேற்று, வாலாஜாபேட்டை, முத்துக்கடை, ஆற்காடு, பூட்டுத்தாக்கு என மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னையின் பல்வெறு பகுதிகளிலும் வானம் மேகமேட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.