Feb 7, 2024, 10:32 PM IST
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதியிலும் இரண்டு நாட்களாக தன்னுடைய நடைபயணத்தை மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பாஜகவின் 10 ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து சோளிங்கர் மற்றும் அரக்கோணம் தொகுதிகளில் நடக்க இருக்கும் நடைப்பயணத்தை மேற்கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது ஜம்பு குளம் கூட்ரோடு பகுதியில் பாஜக விவசாயி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் முரளி நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தந்து அங்குள்ள பசு மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் 10-க்கும் மேற்பட்ட விவசாய தம்பதியர்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பாத பூஜை செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று அனைவருக்கும் ஆடுகளை வழங்கி அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.