வேலூர் கோட்டையில் 480 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடிய சாதனை நிகழ்ச்சி

வேலூர் கோட்டையில் 480 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடிய சாதனை நிகழ்ச்சி

Published : Aug 14, 2023, 11:33 AM ISTUpdated : Aug 14, 2023, 11:35 AM IST

"சுதந்திர கீதம்" என்ற தலைப்பில் சுதந்திர தினவிழாவையொட்டி சங்கு முழங்க வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா புக் ஆப் ரேக்கார்ட்ஸ்  சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சி. 

வேலூர்மாவட்டம், சுதந்திரத்திற்காக வித்திட்ட வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் நாட்டின் 76வது சுதந்திர தினவிழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய சுதந்திர போராட்டங்களுக்கு முதன் முதலில் 1806-ம் ஆண்டு நிகழ்ந்த சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் "சுதந்திர கீதம்" என்ற தலைப்பில் பெற்ற சுதந்திரத்தை பேனிக்காக்க வலியுறுத்தி கின்னஸ் சாதனை முயற்சியாக பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

தனியார் பாரத நாட்டிய பள்ளி மூலம் நடத்தப்பட்ட  இதனை நாரயாணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் துவங்கி வைத்தனர். இச்சாதனை நிகழ்ச்சியில் 7 வயது முதல் உள்ள ஆண், பெண் பரத நாட்டிய கலைஞர்கள் சுமார் 480க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் மூவர்ணக்கொடி ஏந்தியும், சங்குகள் முழங்கவும் தேச பக்தி பாடலுக்கு பரதம் ஆடினர். 

நிகழ்ச்சியின் முடிவில் கின்னஸ் சாதனை பரத நாட்டியத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்  சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இதனை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்