சிப்காட் அருகே நேற்று இரவு கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை பத்திரமாக மீட்ட வனத்துறை அதிகாரிகள், மானை காப்பு காட்டில் விட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கீழாண்டபள்ளேரி ஊராட்சி பகுதியில் உள்ள 40 அடி ஆழமுள்ள ஊர் பொது கிணற்றில் இரவு ஆண் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. பின்னர் அந்த வழியாக சென்ற கிராம பொதுமக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையிலான பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை உயிருடன் பத்திரமாக மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.