திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு

Published : Jan 03, 2024, 09:49 AM IST

திருவண்ணாமலை அருகே ஸ்ரீ கமலாபீடத்தில் சிவஹரி பூஜை-சீத்தா சீனுவாச சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி சிவனடியார்களுக்கு ஆடைதானம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் சக்கரத்தாழ்வார்மடை ஸ்ரீகமலாபீடத்தில் உலக நன்மைக்காகவும், இயற்கை பேரிடர் தவிர்க்கவும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் சிவஹரி பூஜைபெருவிழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி  கோபூஜை  காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீகமலாபீடத்தின்  நிறுவனர் சீத்தாசீனுவாச சுவாமிகள் முன்னிலையில் திருநங்கைகள், சிவனடியார்கள் மற்றும் வைணவசாச்சாரியார்களுக்கு பாதபூசை நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சிவஹரி மகாவேள்விபூஜையும், சங்காபிஷேகமும் நடந்தது. பகல் 12 மணியளவில்  அர்த்தநாரி வாழ்க்கை முறை ஆலோசனை கூட்டம் மற்றும் திருநங்கைகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் கிஷோர்குமார் சிறப்புரையாற்றினார். இதில் மாநில துணை தலைவர்கள் மோகன்சாகர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகல் 1 மணியளவில் கலசநீராட்டு (உற்சவமூர்த்திகளுக்கு) நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஸ்ரீகமலாபீடத்தின் நிறுவனர் சீத்தாசீனுவாசசுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கியதோடு, சிவனடியார்களுக்கு அருட்பிரசாதமும், வஸ்திரதானமும் வழங்கியதோடு அன்னதானமும் வழங்கினார்.

02:13அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..
01:03ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
04:39திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
4550:00திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
02:48திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
07:34தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்
5450:00மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
04:05திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02:00அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்
Read more