vuukle one pixel image

Viral : சேலத்தில் ஷாக் கொடுத்த மின் கட்டணம்! எதுவும் இல்லாத குடிசை வீட்டுக்கு ரூ.28,880/- பில்!

Dinesh TG  | Published: Apr 5, 2023, 7:42 PM IST

சேலம் மாவட்டம் கோரிமேடு அடுத்துள்ள பிடாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அங்குள்ள குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அவரது வீட்டில் மிக்சி ஒன்று, டியுப் லைட் ஒன்று ஆகியவை மட்டுமே உள்ளது. இந்த நிலையில் சராசரியாக அவருக்கு வழக்கமாக மின் கட்டணம் ஏதும் வராது மீறினால் 40 ரூபாய் அல்லது 60 ரூபாய் மட்டுமே தான் இதுவரை மின்சார கட்டணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்க இந்த முறை அவருக்கு கணக்கெடுப்பின் படி 28,880 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும் என வந்துள்ளதாக தெரிகிறது.

Image

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவித்துள்ளார். மேலும் அவர் உடனடியாக இதுகுறித்து கோரிமேடு துணை மின் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மின்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது. அப்போது மின்சாரம் கணக்கீடு செய்யும் போது மீட்டரில் பதிவாகி இருந்த 326 யூனிட்டுக்கு பதிலாக 3026 யூனிட் (குறிப்பு: மீட்டர் வைத்து 4 மாதம் தான் ஆகிறது அதில் மொத்தமாக 326 யூனிட் மட்டுமே பதிவாகி உள்ளது) என மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது இதனால்தான் இந்த பிரச்சனை எனவும் தவறாக கணக்கீடு செய்திருந்ததால் உரிமையாளர்கள் எவ்வளவு மின்சாரம் உபயோகம் செய்துள்ளார்களோ அந்த அளவு கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.