அரசு ஹெலிகாப்டர் கம்பெனியில் வேலை! 8-வது பாஸ், ₹25,000 சம்பளம்!

Published : Apr 21, 2025, 11:06 PM IST

பவன் ஹன்ஸ் வேலைவாய்ப்பு: 8-வது வகுப்புக்கு வேலை, உடனே விண்ணப்பிக்கவும்!

PREV
18
அரசு ஹெலிகாப்டர் கம்பெனியில் வேலை! 8-வது பாஸ், ₹25,000 சம்பளம்!

பவன் ஹன்ஸ் லிமிடெட் - மத்திய அரசு ஹெலிகாப்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8-வது படித்தவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு! இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

28

நிறுவன விவரம்:

நிறுவனம்: Pawan Hans Limited

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்கள்: 17

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2025

38
Advanced Light Helicopter

பணியின் பெயர்: உதவியாளர் (பொருட்கள்/சேமிப்பு) (Assistant (Materials/Stores))

சம்பளம்: வருடத்திற்கு ₹6.12 லட்சம்

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பட்டம் மற்றும் தொடர்புடைய துறையில் 3 வருட பணி அனுபவம் அல்லது ஸ்டோர்ஸ்/மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்டில் 2 வருட டிப்ளோமா மற்றும் தொடர்புடைய துறையில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

48

பணியின் பெயர்: நிலைய பொறுப்பாளர் (Station In-Charge (RCS))

சம்பளம்: வருடத்திற்கு ₹6.12 லட்சம்

காலியிடங்கள்: 08

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் தொடர்புடைய துறையில் 3 வருட பணி அனுபவம் அல்லது மார்க்கெட்டிங்/ஃபைனான்ஸ்/ஏவியேஷன் அல்லது அதற்கு இணையான துறையில் முதுகலைப் பட்டம்/2 வருட டிப்ளோமா மற்றும் தொடர்புடைய துறையில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

58

பணியின் பெயர்: உதவியாளர் (Helper)

சம்பளம்: வருடத்திற்கு ₹3.22 லட்சம்

காலியிடங்கள்: 08

கல்வித் தகுதி: 8-வது வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

68

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST, PWD – கட்டணம் இல்லை
  • Others – ₹118

தேர்வு முறை:

  • Shortlisting (சுருக்கப் பட்டியல்)
  • Interview (நேர்முகத் தேர்வு)
78

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.04.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் இணையதளமான www.pawanhans.co.in சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

HOD (HR&Admin), Northern Region

Pawan Hans Limited, (A Government of India Enterprise)

Northern Region, Rohini Heliport, Sector 36, Rohini,

New Delhi- 110085

Phone: 011-27902646.

88

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை! ₹35,000 சம்பளம், தேர்வே இல்லை!

Read more Photos on
click me!

Recommended Stories