ஆல் ரவுண்டர் சரிகா யாதவ்வின் அதிரடி ஆட்டம் ; டையில் முடிந்த தெலுங்கு சீட்டாஸ் vs பஞ்சாபி டைகர்ஸ் போட்டி!

Published : Apr 22, 2025, 12:17 AM IST

GIPKL 2025 Womens Next 3 Matches Results: குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 தொடரின் மகளிருக்கான இன்றைய 3 போட்டிகளில் முறையே போஜ்புரி, தமிழ் பெண் சிங்கம் ஆகிய அணிகள் வெற்றி பெற்ற நிலையில் 3ஆவது போட்டியானது டையில் முடிந்தது.

PREV
16
ஆல் ரவுண்டர் சரிகா யாதவ்வின் அதிரடி ஆட்டம் ; டையில் முடிந்த தெலுங்கு சீட்டாஸ் vs பஞ்சாபி டைகர்ஸ் போட்டி!

GIPKL 2025 Womens Next 3 Matches Results : குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 தொடரின் மகளிருக்கான இன்றைய போட்டிகள் 6 மணிக்கு தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் இடம் பெற்று விளையாடி வரும் இந்த தொடர் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் ஆண்களுக்கும், அடுத்த 3 போட்டிகள் பெண்களுக்கும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று ஆண்களுக்கான 4, 5 மற்றும் 6ஆவது போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று ஏப்ரல் 21ஆம் தேதி பெண்களுக்கான 4, 5 மற்றும் 6ஆவது லீக் சுற்று போட்டிகள் நடந்தது.

26

ஹர்யான்வி ஈகிள்ஸ் மற்றும் போஜ்புரி லியோபார்ட்ஸ்

மாலை 6 மணிக்கு தொடங்கிய பெண்களுக்கான 4ஆவது லீக் போட்டியில் ஹர்யான்வி ஈகிள்ஸ் மற்றும் போஜ்புரி லியோபார்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஆல் ரவுண்டர் சிந்துஜா அணிக்கு 11 புள்ளிகள் எடுத்துக் கொடுத்தார். இதே போன்று தனு தலியால் (ரைடர்) 9 புள்ளிகள் எடுத்துக் கொடுத்தார். இறுதியாக போஜ்புரி லியோபார்ட்ஸ் 37 புள்ளிகள் பெறவே ஹரியான்வி ஈகிள்ஸ் 26 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.

36

தமிழ் பெண் சிங்கம் மற்றும் மராத்தி ஃபால்கன்ஸ்

இரவு 7 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தமிழ் பெண் சிங்கம் மற்றும் மராத்தி ஃபால்கன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தமிழ் பெண் சிங்கம் அணியில் ரைடர் ரச்சனா விலாஸ் சிறப்பாக விளையாடி 16 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். இதே போன்று டிஃபண்டர் நவ்னீத் 11 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒரு சில புள்ளிகள் பெற்றுக் கொடுக்கவே தமிழ் பெண் சிங்கம் அணியானது 44 – 23 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

46

தெலுங்கு சீட்டாஸ் மற்றும் பஞ்சாபி புலிகள் அணி:

இரவு 8 மணிக்கு நடைபெற்ற தெலுங்கு சீட்டாஸ் மற்றும் பஞ்சாபி புலிகள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது டையில் முடிந்தது. இரு அணி வீராங்கனைகளுமே தலா 38 புள்ளிகள் பெறவே இந்தப் போட்டியானது டையில் முடிந்தது. தெலுங்கு சீட்டாஸ் அனியில் சரிகா யாதவ் (ஆல் ரவுண்டர்) 17 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். இதே போன்று பஞ்சாபி புலிகள் அணியில் டிஃபெண்டர் கீர்த்தி 15 புள்ளிகள் எடுத்துக் கொடுத்தார்.

56

இதற்கு முன்னதாக 19ஆம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் மராத்தி ஃபால்கன்ஸ் மற்றும் தெலுங்கு சீட்டாஸ் அணிகள் மோதின. இதில், தெலுங்கு சீட்டாஸ் 42-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

இதே போன்று அடுத்தடுத்து நடைபெற்ற பஞ்சாபி டைக்ரெஸ் மற்றும் போஜ்புரி லியோபார்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் போஜ்புரி லியோபார்ட்ஸ் 41-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் தமிழ் லயோனஸ் அணி 44-18 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியான்வி ஈகிள்ஸ் அணியை வீழ்த்தியது.

66

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 தொடரில் பெண்களுக்கான போட்டியில் தமிழ் பெண் சிங்கம் அணி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாபி டைகர்ஸ், தெலுங்கு சீட்டாஸ் மற்றும் போஜ்புரி லியோபார்ட்ஸ் அணிகள் தலா ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

மராத்தி ஃபால்கன்ஸ் மற்றும் ஹர்யான்வி ஈகிள்ஸ் ஆகிய அணிகள் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6 இடங்களை பிடித்துள்ளன.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories