சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு? ஆர்சிபி போட்டியிலும் விலகல்! திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறாரா?

Published : Apr 21, 2025, 06:47 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். ஆனாலும அவர் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  

PREV
14
சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு? ஆர்சிபி போட்டியிலும் விலகல்! திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறாரா?

Sanju Samson Ruled out against RCB match:  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 2ல் மட்டுமே வெற்றி பெற்று தத்தளித்து வருகிறது. ராஜஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் வரும் 24ம் தேதி பெங்களூருவில் ஆர்சிபியை எதிர்கொள்கிறது. 

24
Sanju Samson, RR, IPL

ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் இனி ஒவ்வொரு போட்டியும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில், அந்த அணி கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு எதிரான முந்தைய போட்டியிலும் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. 

''சஞ்சு சாம்சன் தற்போது குணமடைந்து வருகிறார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட RR மருத்துவ ஊழியர்களுடன் ஜெய்ப்பூரிலேயே இருப்பார். அவரது தற்போதைய மறுவாழ்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, RCBக்கு எதிரான வரவிருக்கும் போட்டிக்காக அவர் பெங்களூருக்கு பயணம் செய்ய மாட்டார். அணி நிர்வாகம் அவரது முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்து ஆட்டத்திற்கு ஆட்டம் அணுகுமுறையை எடுக்கும்" என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் வச்ச ஆப்பு! காத்து வாங்கப் போகும் ஸ்டேடியம்! டிக்கெட் விற்பனை மந்தம்!

34
Sanju Samson Injury

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போது சஞ்சு சாம்சன் காயமடைந்தார். இதனால் உடனடியாக டக்அவுட்டுக்குத் திரும்பிய அவர் அந்த போட்டியில் விளையாடவில்லை. இதற்கு அடுத்து ல்க்னோ போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் காயம் என்னும் போர்வையில் ராஜஸ்தான் அணியில் இருந்து திட்டமிட்டு ஓரம்கட்டப்படுவதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சஞ்சு சாம்சனுக்கும், ராஜஸ்தான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே மோதல் இருந்து வருவதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தன. டெல்லிக்கு எதிரான போட்டியின்போது சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் ஜோப்ரா ஆர்ச்சரை பந்துவீச முடிவு செய்த நிலையில், ராகுல் டிராவிட்டும் மற்ற அணி நிர்வாகிகளும் சந்தீப் சர்மாவை பவுலிங் செய்ய வைத்துள்ளார். இதேபோல் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரியான் பராக்கை சாம்சன் களமிறக்க விரும்பிய நிலையில், டிராவிட் ஹெட்மயரை களமிறக்கி இருக்கிறார்.

44
RCB vs RR, Cricket

இப்படியாக கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான மோதலே அந்த அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்த ராகுல் டிராவிட், சஞ்சு சாம்சனுக்கும் தனக்கும் எந்தவிதமான மோதலும் இல்லை என்றும் அணியின் முடிவுகள் கேப்டன், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளிடம் கேட்டே எடுக்கப்படுகிறது என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில், சஞ்சு சாம்சன் தொடர்ந்து 2 போட்டியில் விளையாட வைக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. காயம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் டிராவிட்டும், ராஜஸ்தான் நிர்வாகமும் சஞ்சு சாம்சனை திட்டமிட்டு ஓரம்கட்டி வருவதாக சிலர் கூறுகின்றனர்.

சிஎஸ்கே இனி கம்பேக் கொடுப்பது கஷ்டம்! பிரச்சனையே இதுதான்! அம்பத்தி ராயுடு ஓபன் டாக்!

Read more Photos on
click me!

Recommended Stories