Ambati Rayudu Speech About CSK Team: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தது.பின்பு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 45 பந்தில் 76 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 68 ரன்கள் அடித்தார்.
24
Ambati Rayudu, CSK
இப்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இனி வரும் 6 போட்டிகளும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், சிஎஸ்கே அணி இனி மீண்டு வருவது கடினம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய அம்பத்தி ரயுடு, ''சிஎஸ்கே மிடில் ஓவர்களில் 7 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது தோல்விக்கு காரணமாகி விட்டது. இன்றைய டி20 கிரிக்கெட்டில் யாரும் இப்படி விளையாடுவதில்லை. மிடில் ஓவர்களில் ஸ்டிரைக் ரேட் அதிகம் இருந்தால் தான் போட்டியை வெற்றி பெற முடியும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''சிஎஸ்கே ஆட்டத்தில் ஆர்வம் குறைந்திருந்தது. நீங்கள் ஒரு போட்டியை தோற்றாலும் போராடி தோற்க வேண்டும். ஒரு கட்டத்தை வெறுமனெ கடக்க நினைத்து, இறுதியில் வெற்றிபெறலாம் என்று நினைக்க முடியாது. இந்த பிட்ச்சில் வெற்றி பெற குறைந்தபட்சம் 190 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் பேட்டிங் சரியில்லாததால் சவாலான இலக்கு நிர்ணயிக்க முடியவில்லை'' என்று தெரிவித்தார்.
44
IPL, MS Dhoni
இந்த தொடர் தோல்விகளில் இருந்து சிஎஸ்கே மீண்டு வருமா? என்று கேட்டபோது அதற்கு பதில் அளித்த அம்பத்தி ராயுடு, ''இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டும் கம்பேக் கொடுப்பார்கள் என எனக்கு தெரியவில்லை. தோனி கூட அதைப் போட்டிக்குப் பிறகு கூறினார். அவர்கள் அடுத்த சீசனை நோக்கிச் செல்கிறார்கள். புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பாளித்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர விரும்புகிறார்கள். இளைஞர்களை வளர்த்து, பயப்படாத, ஆனால் பொறுப்புள்ள ஆட்ட கலாச்சாரத்தை உருவாக்க விரும்புகிறார்கள். நேர்மறையான ஆட்டம் தேவை. ஆயுஷ் மாட்ரே போன்ற வீரர்களுக்கு முழு வாய்ப்பளிக்கலாம்'' என்று தெரிவித்தார்.