
Reasons for CSK's defeat against Mumbai Indians: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 35 பந்தில் 53 ரன் அடித்தார். ஷிவம் துபே 32 பந்தில் 50 ரன்கள் விளாசினார். மும்பை தரப்பில் பும்ரா 4 ஓவரில் 25 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
சிஎஸ்கே படுதோல்வி
இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 45 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரியுடன் 76 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 68 ரன்கள் விளாசினார். 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இனி சிக்கல் தான்
இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். நேற்றைய மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும், பவுலிங்கில் சொதப்பியதால் தோல்வி அடைந்துள்ளது. இது மட்டுமின்றி சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி எடுத்த 3 முக்கியமான முடிவுகள் தோல்விக்கு காரணமாகி விட்டன.
டெவால்ட் பிரெவிஸ் ஏன் பிளேயிங் லெவனில் இல்லை?
இந்த போட்டியில் டெவால்ட் பிரெவிஸை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியதே CSK மற்றும் தோனியின் முதல் தவறு. இந்த சீசனில் அந்த அணிக்கு உண்மையான பவர்-ஹிட்டர்கள் இல்லை. இதுவரை அனைத்து பேட்டர்களும் இன்னிங்ஸை துரிதப்படுத்தத் தவறிவிட்டனர். எனவே, தென்னாப்பிரிக்காவின் ஸ்டார் வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஒரு சிறந்த SA20 தொடரில் இருந்து புத்துணர்ச்சியுடன் இருப்பதால், மிடில் ஆர்டரில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தால் கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும். குறிப்பாக, MI அணிக்கு எதிரான போட்டியில், CSK மீண்டும் மிடில் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தத் தடுமாறியது. பிரெவிஸ் பிரெவிஸ் இருந்திருந்தால் அங்கு விரைவான ரன்கள் எடுத்திருப்பார்.
MI vs CSK : சேப்பாக்கம் தோல்விக்கு பதிலுக்கு பதில் மொத்தமா திருப்பி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!
தவறான இம்பேக்ட் பிளேயர் தேர்வு
நேற்றைய போட்டியின்போது எடுக்கப்பட்ட மற்றொரு தவறான முடிவு இம்பேக்ட் பிளேயராக அன்ஷுல் காம்போஜை எடுப்பதற்கு பதிலாக அஸ்வினை எடுத்தது. மும்பை அணியில் மிட்செல் சான்ட்னர் சிறப்பாக பந்து வீசியதால் உதாரணமாகக் கொண்டு CSK அஷ்வினைக் கொண்டு வந்தது. அஸ்வின் நான்கு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து சிக்கனமாகத் தான் பந்து வீசி இருந்தார். ஆனால் இந்த போட்டியில் சிஎஸ்கேவுக்கு விக்கெட் எடுக்கும் பவுலர்களே தேவையாக இருந்தது. அன்ஷுல் காம்போஜ் எடுக்கப்பட்டு இருந்தால் அவர் அஸ்வினை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.
சிறந்த பவுலர்களை முதலிலேயே பயன்படுத்த தவறியது
மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியின் போது தோனி எடுத்த மற்றொரு மோசமான முடிவு, கடைசி வரை தனது சிறந்த பந்து வீச்சாளர்களை ஒதுக்கி வைத்தது. சிஎஸ்கே நிர்ணயித்த சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸ் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி நெருங்கியது. அப்போதே தங்களது சிறந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி தோனி நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் இன்னிங்ஸின் தொடக்கத்தில் நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானாவை பயன்படுத்தவில்லை. போட்டியின் 10வது ஓவரில் தான் நூர் அகமது பந்துவீசினார். அப்போது மும்பை அணி ஏற்கனவே 88/1 ஆக இருந்தது. பதிரனா போட்டியின் 14வது ஓவரில் தான் பந்து வீச வந்தார். அப்போது மும்பை அணி ஏறக்குறைய வெற்றியின் விளிம்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli : ஐபிஎல்லில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த வார்னரின் சாதனையை முறியடித்த கோலி!