ரோகித் சர்மா-சூர்யகுமார் யாதவ் சென்னை பந்துவீச்சை சிதறடித்தனர்
சென்னை அணி நிர்ணயித்த இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, ரையன் ரக்கெல்டன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்து அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். ரக்கெல்டன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரோஹித், சூர்யகுமார் யாதவ் ஜோடி சிஎஸ்கேவுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.
இன்னும் 26 பந்துகள் மீதமிருக்கையில் மும்பை அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர். ரோஹித் 45 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.