ஃபார்மில் விராட் கோலி
ஐபிஎல் 2025ல் விராட் கோலி அபார ஃபார்மில் உள்ளார். 8 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் 322 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். 64.40 சராசரியுடன், 140 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கோலி விளையாடி வருகிறார். இதில் கோலி 4 அரைசதங்களும் அடித்துள்ளார்.
ஐபிஎல் 2025ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 62*, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 45 பந்துகளில் 62*, பஞ்சாப் அணிக்கு எதிராக 43 பந்துகளில் 73* ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான கடைசி ஐந்து இன்னிங்ஸ்களில் கோலி நான்காவது அரைசதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த 5 இன்னிங்ஸ்களில் கோலியின் ரன்கள் முறையே 59, 77, 92, 1, 73* ஆகும்.