MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • சிஎஸ்கே இனி கம்பேக் கொடுப்பது கஷ்டம்! பிரச்சனையே இதுதான்! அம்பத்தி ராயுடு ஓபன் டாக்!

சிஎஸ்கே இனி கம்பேக் கொடுப்பது கஷ்டம்! பிரச்சனையே இதுதான்! அம்பத்தி ராயுடு ஓபன் டாக்!

சிஎஸ்கே இனி கம்பேக் கொடுப்பது கஷ்டம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 21 2025, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Ambati Rayudu Speech About CSK Team: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தது.பின்பு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 45 பந்தில் 76 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 68 ரன்கள் அடித்தார்.

24
Ambati Rayudu, CSK

Ambati Rayudu, CSK

இப்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இனி வரும் 6 போட்டிகளும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், சிஎஸ்கே அணி இனி மீண்டு வருவது கடினம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய அம்பத்தி ரயுடு, ''சிஎஸ்கே மிடில் ஓவர்களில் 7 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது தோல்விக்கு காரணமாகி விட்டது. இன்றைய டி20 கிரிக்கெட்டில் யாரும் இப்படி விளையாடுவதில்லை. மிடில் ஓவர்களில் ஸ்டிரைக் ரேட் அதிகம் இருந்தால் தான் போட்டியை வெற்றி பெற முடியும்'' என்றார்.

பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்! ஷ்ரேயாஸ் சேர்ப்பு! கோலி, ரோகித் எந்த இடம்? யாருக்கு எவ்வளவு சம்பளம்?

34
Chennai Super Kings, Cricket

Chennai Super Kings, Cricket

தொடர்ந்து பேசிய அவர், ''சிஎஸ்கே ஆட்டத்தில் ஆர்வம் குறைந்திருந்தது. நீங்கள் ஒரு போட்டியை தோற்றாலும் போராடி தோற்க வேண்டும்.  ஒரு கட்டத்தை வெறுமனெ கடக்க நினைத்து, இறுதியில் வெற்றிபெறலாம் என்று நினைக்க முடியாது. இந்த பிட்ச்சில் வெற்றி பெற குறைந்தபட்சம் 190 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் பேட்டிங் சரியில்லாததால் சவாலான இலக்கு நிர்ணயிக்க முடியவில்லை'' என்று தெரிவித்தார்.

44
IPL, MS Dhoni

IPL, MS Dhoni

இந்த தொடர் தோல்விகளில் இருந்து சிஎஸ்கே மீண்டு வருமா? என்று கேட்டபோது அதற்கு பதில் அளித்த அம்பத்தி ராயுடு, ''இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டும் கம்பேக் கொடுப்பார்கள் என எனக்கு தெரியவில்லை. தோனி கூட அதைப் போட்டிக்குப் பிறகு கூறினார். அவர்கள் அடுத்த சீசனை நோக்கிச் செல்கிறார்கள். புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பாளித்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர விரும்புகிறார்கள். இளைஞர்களை வளர்த்து, பயப்படாத, ஆனால் பொறுப்புள்ள ஆட்ட கலாச்சாரத்தை உருவாக்க விரும்புகிறார்கள். நேர்மறையான ஆட்டம் தேவை. ஆயுஷ் மாட்ரே போன்ற வீரர்களுக்கு முழு வாய்ப்பளிக்கலாம்'' என்று தெரிவித்தார்.

CSK vs MI: தோனி எடுத்த தவறான 3 முடிவுகள்! சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
சிஎஸ்கே
மும்பை இந்தியன்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பை தொடர்.. இந்தியாவை முந்தும் பாகிஸ்தான்..! ஆதிக்கம் செலுத்தும் பாக். ஸ்பின்னர்கள்
Recommended image2
SKY செய்த 'அந்த' 3 மெகா தவறு.. மரண அடி வாங்கிய இந்தியா.. செமி பைனல் சான்ஸ் இருக்கா? முழு அலசல்!
Recommended image3
T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved