இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தளத்தில் நடந்தது. வழக்கமாக சிஎஸ்கே மேட்ச் என்றாலே ரசிகர்கள் எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பார்கள். இதனால் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காதவர்கள் கள்ளச்சந்தையில் ரூ.50,000, ரூ.70,000ம் கூட கொடுத்து டிக்கெட் வாங்கி வந்தனர்.
ஆனால் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை படுமந்தமாகவே நடந்தது. இன்றைய டிக்கெட் விற்பனையின்போது ஆன்லைன் கியூவில் வெறும் 4.000 முதல் 10,000 ரசிகர்கள் மட்டுமே லைனில் காத்திருந்தனர். சிஎஸ்கே மைதானத்தில் ஐ,கே மற்றும் டெரஸ் ஆகிய கேலரிகளில் பெரும்பகுதி டிக்கெட் இன்னும் விற்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.