- Home
- Sports
- சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் வச்ச ஆப்பு! காத்து வாங்கப் போகும் ஸ்டேடியம்! டிக்கெட் விற்பனை மந்தம்!
சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் வச்ச ஆப்பு! காத்து வாங்கப் போகும் ஸ்டேடியம்! டிக்கெட் விற்பனை மந்தம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக நடந்துள்ளது. சிஎஸ்கே தொடர் தோல்வியால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

Ticket sales slow for CSK vs SRH Match: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 5 முறை கோப்பையை கையில் ஏந்திய சிஎஸ்கேவின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
CSK vs SRH
நேற்று மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்நாள் வரை சிஎஸ்கேவின் பவுலிங் ஓரளவு சிறப்பாக இருந்த நிலையில், நேற்று பவுலிங்கிலும் சிஎஸ்கே வீரர்கள் முற்றிலுமாக சொதப்பி விட்டனர். சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் வரும் 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
சிஎஸ்கே இனி கம்பேக் கொடுப்பது கஷ்டம்! பிரச்சனையே இதுதான்! அம்பத்தி ராயுடு ஓபன் டாக்!
CSK Ticket Sales
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தளத்தில் நடந்தது. வழக்கமாக சிஎஸ்கே மேட்ச் என்றாலே ரசிகர்கள் எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பார்கள். இதனால் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காதவர்கள் கள்ளச்சந்தையில் ரூ.50,000, ரூ.70,000ம் கூட கொடுத்து டிக்கெட் வாங்கி வந்தனர்.
ஆனால் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை படுமந்தமாகவே நடந்தது. இன்றைய டிக்கெட் விற்பனையின்போது ஆன்லைன் கியூவில் வெறும் 4.000 முதல் 10,000 ரசிகர்கள் மட்டுமே லைனில் காத்திருந்தனர். சிஎஸ்கே மைதானத்தில் ஐ,கே மற்றும் டெரஸ் ஆகிய கேலரிகளில் பெரும்பகுதி டிக்கெட் இன்னும் விற்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
MS Dhoni, CSK
ஆன்லைனிலேயே யாரும் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டாததால் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை. இனி எப்படியும் சிஎஸ்கே வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல போவதில்லை என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்து விட்டதால் டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது. சிஎஸ்கே வெளியூர்களில் அடி வாங்கினாலும், சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடும். ஆனால் இந்த முரை சென்னை சேப்பாக்கத்திலும் படுதோல்விகளை சந்தித்து இருக்கிறது. இதனால் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே போட்டிகளை காண யாரும் ஆர்வம் காட்டவில்லை.
''இந்த சீசனில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுக்க முயற்சிப்போம். இல்லாவிடில் அடுத்த சீசனுக்கான அணியை வலுவாக தயார் செய்து அடுத்த சீசனில் கம்பேக் கொடுப்போம்'' என கேப்டன் தோனியே கூறி விட்டார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதாகவே டிக்கெட் விற்பனை காட்டுகிறது.
CSK vs MI: தோனி எடுத்த தவறான 3 முடிவுகள்! சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம்!