குருத்தோலை ஞாயிறு.. ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்.!!

Apr 2, 2023, 10:52 AM IST

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கழுதைகுட்டியின் மீது அமர்ந்து ஜெருசலேம் நகருக்கு சென்றார். அப்போது ஜெருசலேம் மக்கள் குறுத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

சேலம் மாநகரின் பிரசித்தி பெற்ற குழந்தை இயேசு பேராலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனியாக பேராலயத்திற்கு வந்தனர். இதே போல் சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவாலயம், அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயம், ஜங்ஷன் சிஎஸ்ஐ திருத்துவ ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவர் ஆலயம், ஜான்சன் பேட்டை அந்தோணியார் ஆலயம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க..ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா