ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா; பெரம்பலூரில் மாறுவேடத்தில் வாக்கு சேகரித்த திமுக பிரமுகர்

ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா; பெரம்பலூரில் மாறுவேடத்தில் வாக்கு சேகரித்த திமுக பிரமுகர்

Published : Mar 19, 2024, 04:53 PM IST

திமுகவுக்கு போடுற ஓட்டு நாட்டுக்கு நல்லது பண்றதுக்கு போடுற ஓட்டு என ஜக்கம்மா வேடம் அணிந்த நபர் குடுகுடுப்பை அடித்து  துறைமங்கலம் பகுதியில் வாக்கு சேகரித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அருண்நேரு, பாஜக சார்பில் தற்போதைய எம்பி பாரிவேந்தரும் களம் காண்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் வேட்பாளர் யாரை அறிவிப்பார்கள் என அக்கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே ஒருசில பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியும் சூடு பிடித்து வருகிறது. அதன்படி பெரம்பலூர் துறைமங்களத்தில் குறிசொல்லும் வேடம் அணிந்த நபர் திமுகவிற்கு வாக்கு சேகரித்தார். திமுக அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்ததுடன் பாஜகவிற்கோ மற்ற கட்சிகளுக்கோ வாக்களித்தால் வேலைவாய்ப்பின்மை போன்றவை பெருகும் என குறிசொல்வது போல் குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரித்தார். அப்போது பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த வாக்குசேகரிப்பு முறை அப்பகுதிவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
 

02:12வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.. களைப்பு தீர இளநீர் தோப்புக்குள் குதித்த திருடர்கள்.. பெரம்பலூர் அருகே சம்பவம்!
01:03போதைப் பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் தீவிரமாக போஸ்டர் கிழிக்கும் பணியில் தமிழக போலீஸ்
01:28விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்கள்; கடவுள் ரூபத்தில் வந்து காப்பாற்றிய ஆட்சியர் - பொதுமக்கள் பாராட்டு
03:16எனக்கு மகன் பிறந்தால் முதல்வரின் பெயரை தான் வைப்பேன்; சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண் நெகிழ்ச்சி
01:21அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்க தடை? அது என்னோட சப்ஜெக்ட் இல்ல - அமைச்சர் மழுப்பல்
01:10Watch : குடியிருப்பி நிலம் ஆக்கிரமிக்க முயற்சி! - மீட்டு தருமாறு மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை!
00:35பாஜக நிர்வாகியின் கார் மீது கல்வீச்சு… கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்!!
00:44தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து...மாணவர் உயிரிழப்பு..!
01:17யூனிஃபார்ம் போட்டு குடி போதையில் டூட்டி பார்க்கும் போலீஸ்... பெரம்பூர் வீதியில் நடந்த வீடியோ காட்சி!!
Read more