குன்னூர் பேருந்து விபத்து.. உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

Oct 1, 2023, 4:52 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பேட்டியில், தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 60 பேர்  கிளம்பி கொச்சின் குருவாயூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பின்னர், குன்னூர் சுற்றி பார்த்து விட்டு திரும்பி போகும் போது விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் இரண்டு பேர், உதகையில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களுக்கு 2 இலட்ச ரூபாய் நிவாரணம் அவர்களது ஊரில் வாரிசுகளிடம் வழங்கப்பட உள்ளது. நேற்று சம்பம் நடைப்பெற்ற உடன் மாவட்ட நிர்வாகம் திறமையாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்க்கொண்டது. 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ், தொண்டு நிறுனத்தினர் சிறப்பாக செயல்பட்டனர். 32 பேர் நலமாக உள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின் அவரவர் சொந்த கிராமத்திற்க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். அவரவர் சொந்த கிராமத்திற்கு அனுப்பும் பணியை இன்று மாலைக்குள் மாவட்ட நிர்வாகம் மேற்க்கொள்ளப்படும். காயமடைந்த 32 பேருக்கும் மன நல ஆலோசனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?