தென் மாவட்ட மக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஸ்டாலின்.. திமுகவை வெளுக்கும் ஆர்.பி.உதயகுமார்

Aug 5, 2023, 6:11 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சரும், கூறியுள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், வருகின்ற 18ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கட்சி நிகழ்ச்சிக்காகவும், மீனவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கலந்து கொள்வதாக  செய்திகள் வெளியாகி இருக்கிறது. நீங்கள் (ஸ்டாலின்) இன்றைக்கு 525 தேர்தல் வாக்குறுதிகளை இன்றைக்கு கொடுத்துவிட்டு, மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள், இந்த தென்மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கிற வறட்சி பகுதி மக்களின்  நூற்றாண்டு கால கோரிக்கையான, அந்த பகுதி மக்களுடைய காலகாலமான கோரிக்கையான காவேரி வைகை குண்டாறு திட்டத்தை 14,400 கோடி அளவிலே, இந்த வறட்சி மாவட்டத்தை, வளமிகு மாவட்டமாக உருவாக்குவதற்காக எடப்பாடியார் இந்த திட்டத்தை தந்தார். ஆனால் அந்த திட்டத்தை நீங்கள் கிடப்பில் போட்டு இருக்கிறீர்களே, அந்த மக்களை வஞ்சிக்கிற வகையில் தானே இந்த நிகழ்வை மக்கள் பார்க்கிறார்கள். மாவட்டத்தை வளர்ச்சி பெற வேண்டும் என்று தான் திட்டத்தை எடப்பாடியார் உருவாக்கினார். 

இன்றைக்கு நீங்கள் மீண்டும் வறட்சி மாவட்டமாக உருவாக்க பார்க்கிறீர்கள். புதுக்கோட்டையில் 14,400 கோடியில் எடப்பாடியார் தொடங்கிய தொடங்கிய இந்த திட்டம் தற்போது என்ன ஆனது? ராமநாதபுரம் சீமைக்கு வருகை தரும் முதலமைச்சர்  மீனவர்கள் மாநாட்டிலே கலந்து கொள்ள வருகிறீர்கள். உங்கள் தேர்தல் அறிக்கையிலே எண்113யில் கூறப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தால் பலி கொடுக்கப்பட்ட அந்த கட்ச தீவு உரிமை மீட்க முயற்சி எடுப்போம் என்று கூறி உள்ளீர்கள். அதில் சிறிய கல்லாவது முயற்சி எடுத்தீர்களா? திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை மீனவர்கள் கைது, எத்தனை மீனவர்கள் துப்பாக்கியால் பலி, இதற்கு நீங்கள் தனி கவனம் செலுத்தி தீர்வு கண்டீர்களா?

காவிரி குண்டார் இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டு மக்களை வஞ்சித்துள்ளீர்கள். வருகின்ற 18ஆம் தேதி இதற்குரிய அறிக்கையை அறிவிப்பை நீங்கள் வெளியிட தயாரா? மதுரை மக்களுக்காக கூட்டு குடிநீர் திட்டத்தை, லோயர் கேம்ப்,முல்லை பெரியார் அணையில் இருந்து  அம்ருத் திட்டத்தை எடப்பாடியார்  புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவில் தொடங்கி வைத்த, அந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டு மக்களை வஞ்சிக்கலாமா?

எடப்பாடியார் கொண்டு வந்த மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டு மக்களை வஞ்சித்தால், எடப்பாடியாரை மக்கள் விரைவில் முதலமைச்சராக  அமர வைப்பார்கள். அப்பொழுது எடப்பாடியார் மீண்டும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு வழங்குவார் என்று கூறியுள்ளார்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!